தனலட்சுமி பொறியியல் கல்லூரி

தனலட்சுமி பொறியியல் கல்லூரி[1] (Dhanalakshmi College of Engineering) என்பது 2000ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும்.

தனலட்சுமி பொறியியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2000
முதல்வர்நீ. இரமேஷ்பாபு
அமைவிடம், ,
வளாகம்மணிமங்கலம் புதுச்சேரி சாலை
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

அறிமுகம்

தொகு

தனலட்சுமி பொறியியல் கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழக[2] இணைவு பெற்ற தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி ஆகும். இதன் பிரதான வளாகம் சென்னை கிண்டியிலும் துணை வளாகம் சென்னை குரோம்பேட்டையிலும் உள்ளது. தனலட்சுமி கல்வி அறக்கட்டளையின் ஒரு பகுதியான தனலட்சுமி பொறியியல் கல்லூரி 2001-2002ஆம் ஆண்டில் சென்னையில் தாம்பரம் அருகே அமைக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு[3] (ஏ.ஐ.சி.டி.இ) இந்த கல்லூரிக்கு ஒப்புதல் அளித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

தொகு

தனலட்சுமி பொறியியல் கல்லூரி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம் புதுச்சேரி சாலையில் அமைந்துள்ளது.

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கலை, கணினி அறிவியல் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல் என பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு