தனித்தியங்கும் ஆற்றல் ஒருங்கியம்
தனித்தியங்கும் ஆற்றல் ஒருங்கியம் (stand-alone power system (SAPS or SPS)) என்பது ஒரு பெரிய மின் வலைப்பின்னலோடு இணைக்கப்படாத ஆற்றல் வழங்கல் ஒருங்கியம் ஆகும். ஒரு வீட்டின், கட்டிடத்தின் அல்லது சிறு குமுகத்தின் ஆற்றல் தேவைகளை தனியாக பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டு இருக்கும். பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆற்றல் உற்பத்தி, சேமிப்பு, சீராக்கும் முறைகளை இது கொண்டிருக்கும்.[1][2][3]
மின் உற்பத்தி முறைகள்
தொகுமின்சாரம் பொதுவாக பின்வரும் முறைகளைப் பயன்படித்தி உற்பத்தி செய்யப்படும்:
- சூரிய ஆற்றல் - சூரியப்பலகம் (solar panel)
- காற்றுச் சுழலி
- புவிவெப்ப மின்சாரம்
- Micro combined heat and power
- Micro hydro
- டீசல், உயிரி எரிபொருள் மின்னாக்கி
மின் சேமிப்பு
தொகுதனித்தியங்கும் ஆற்றல் ஒருங்கியங்களில் மின்சாரச் சேமிப்பு ஒரு முக்கிய சிக்கலாகும். சூரிய ஒளி, காற்று போன்றவை முழு நேரமும் கிடைக்கக் கூடிய வளங்கள் இல்லை. அவை அதிகம் கிடைக்கும்போது அவற்றைச் மின்கலங்கள் கொண்டு சேமித்து பயன்படுத்தக் கூடியவாறான கட்டமைபு கூடிய பொருட் செலவை இந்த ஒருங்கியங்களுக்கு ஏற்படுத்துகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Stand-Alone Photovoltaic Systems". renewable-energy-sources.com. Archived from the original on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2011-07-21.
- ↑ "A STAND-ALONE PHOTOVOLTAIC SYSTEM, CASE STUDY: A RESIDENCE IN GAZA" (PDF). trisanita.org. Archived from the original (PDF) on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2011-07-21.
- ↑ "Stand Alone PV Systems". eai.in. பார்க்கப்பட்ட நாள் 2011-07-21.