தனுசிறீ சங்கர்

தனுசிறீ சங்கர் (Tanushree Shankar ) (பிறப்பு: 1956 மார்ச் 16) [1]இந்தியாவில் சமகால நடனத்தின் முன்னணி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்களில் இவரும் ஒருவராவார். தற்போது இவர் இந்தியாவின் கொல்கத்தாவில் வசிக்கிறார். 1970கள் மற்றும் 1980களில் ஆனந்த சங்கர் நிகழ்த்து கலைகளுக்கான முன்னணி நடனக் கலைஞராக இவர் புகழ் பெற்றவராவார். இவர் ஒரு நடிகையாக, ஆகூன் (1988), துய் ப்ரிதிபி (1980) மற்றும் எக்தி தாரர் கொன்ஜே: பியாண்ட் தி ஸ்டார்ஸ் (2010) ஆகியத் திரைப்படங்களுக்காக நன்கு அறியப்பட்டவர். [2] நடனத்தைத் தவிர தனுசிறீ சங்கர் பெங்காலி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு நடிகையாக நன்கு அறியப்பட்டவர். சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். தி நேம்சேக் போன்ற பல்வேறுத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பயிற்சி தொகு

இந்தியா கலாச்சார மையத்தில் பல ஆசிரியர்களின் கீழ் பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றார். குரு கியான் பிரகாஷிடமிருந்து பரதநாட்டியம், பி.ராகவனின் கீழ் கதகளி, தருண் சிங்கிடமிருந்து மணிப்பூரி நடனம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.

பரம்பரை தொகு

தனுசிறீ சங்கர் இப்போது இந்தியாவில் சமகால நடன வடிவங்களின் நடன நிறுவனமான "தனுசிறீ சங்கர் நடன நிறுவன"த்தை வழிநடத்துகிறார். நவீன மேற்கத்திய பாலே வெளிப்பாடுகளுடன் பாரம்பரிய இந்திய நடனங்களை இணைத்து நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதன் மூலம் இவர் தனது சொந்த பரம்பரையை உருவாக்கியுள்ளார். இந்தியாவின் நாட்டுப்புற மற்றும் பிராந்திய நடன வடிவங்களால் ஈர்க்கப்பட்ட இவர் தனது பரம்பரையை உருவாக்கினார். " தாங்-தா " ( மணிப்புரி வாள் நடனம் ) போன்ற செல்வாக்குமிக்க உள்ளூர் இந்திய மரபுகளிலிருந்து இவர் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார்.

நிகழ்ச்சி தொகு

இவர் தனது குழுவுடன் உலகம் முழுவதும் பல இடங்களுக்கும் விரிவாக பயணம் செய்து வருகிறார். இவரது கடைசி குறிப்பிடத்தக்க தயாரிப்புகளில் உத்தரண் (ஆன்மாவின் மேம்பாடு ) மற்றும் சிரந்தன் (நித்தியம்) ஆகியவை இரவீந்திரநாத் தாகூரின் இசையை அடிப்படையாகக் கொண்டவை.

புகழ் பெற்ற நடன நடனக் கலைஞரான் உதய் சங்கரின் நடன நுட்பத்தையும், குழு நடனக் கலைகளின் பாணியையும் பயிற்றுவித்து வருகிறார். சோவியத் நாடு (1998), ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (1982) மற்றும் இந்திய அரசு ஏற்பாடு செய்த தேசிய நாட்டுப்புற நடன விழா போன்ற போன்ற மதிப்புமிக்க நிகழ்வுகளில் இவர் தனது படைப்புகளை வழங்கியுள்ளார். இவர் நன்கு அறியப்பட்ட சர்வதேச நடன நிறுவனங்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். மேலும் தனது தயாரிப்புகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்தார். தனுசிறீ சங்கரின் நடனப் பணிகளுக்கான பெரும்பாலான இசையை இவரது மறைந்த கணவர் ஆனந்த சங்கர் இசையமைத்தார். தற்போது, தனுசிறீ கொல்கத்தாவில் உள்ள தனது சொந்த நிறுவனமான தனுசிறீ சங்கர் நடன நிறுவனத்தில் இளம் நடனக் கலைஞர்களுக்கும் நடன இயக்குனர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார். அமெரிக்காவில் உள்ள மார்த்தா கிரஹாம் ஸ்கூல் ஆஃப் காண்டெம்பரரி டான்ஸ் மற்றும் ஆல்வின் அய்லி அமெரிக்கன் நடன மையத்தில் வகுப்புகளை நடத்தியுள்ளார். [3]

குடும்பம் தொகு

தனுசிறீ சங்கர் 1956 மார்ச் 16, அன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார். இவரது கணவர், மறைந்த ஆனந்த சங்கர், உலகளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக இருந்தார். இவர் இணைவு இசையில் பரிசோதனை செய்தார். இவர் நடனக் கலைஞர்களான பண்டிட் உதய் சங்கர் மற்றும் அமலா சங்கர் ஆகியோரின் மகனும், சித்தார் மேதை ரவிசங்கரின் மருமகனும் ஆவார்.

குறிப்புகள் தொகு

  1. "Tanushree Shankar". IMDB. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.
  2. https://www.imdb.com/name/nm1929716/bio?ref_=nm_ov_bio_sm
  3. https://sangeetnatak.gov.in/sna/citation_popup.php?id=866&at=2[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுசிறீ_சங்கர்&oldid=3297499" இலிருந்து மீள்விக்கப்பட்டது