தனெசுமி எலி

தனெசுமி எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. தனெசுமி
இருசொற் பெயரீடு
ரேட்டசு தனெசுமி
தெம்மினிக், 1844

தனெசுமி எலி (Tanezumi Rat-ரேட்டசு தனெசுமி) ஆசிய எலி அல்லது ஆசிய வீட்டு எலி என்றும் அழைக்கப்படுகிறது. இது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணி சிற்றினம் ஆகும். இது கருப்பு எலியுடன் (ரேட்டசு ரேட்டசு) நெருக்கமாகத் தொடர்புடையது. இது கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படுகிறது. வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, கோகோசு (கீலிங் தீவுகள், பிஜி, இந்தியா, இந்தோனேசியா, சப்பான், வட கொரியா, தென் கொரியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பீன்சு, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

விளக்கம்

தொகு

தனெசுமி எலி என்பது நடுத்தர அளவிலான எலியாகும். இதனுடைய உடல் நீளத்தினை விட வாலின் நீளம் அதிகமாகவோ இணையாகவோ காணப்படும். இத்னை ரே. ரேட்டசிலிருந்து புறத்தோற்ற அடிப்படையில் பிரித்தறிய முடியாதது. முதிர்வடைந்த எலியின் நீளம் 65 முதல் 300 கிராம் வரையும், உடல் நீளம் 114 முதல் 224 மி.மீ. வரையும் நீளம் 110 முதல் 231 மி.மீ. வரையும், பின்னங்கால் நீளம் 30 முதல் 43 மி.மீ. வரையும் காதின் நீளம் 16 முதல் 25 மி.மீ. வரையும் இருக்கும்.[2] வயிற்றுப் பகுதி உரோமங்கள் பொதுவாக வெண்மையாக இருக்கும். இருப்பினும் சில நேரங்களில் வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற நுனியுடன், மற்றும் சில சமயங்களில் சாம்பல் உரோமங்களுடன் காணப்படும்.[3]

படம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Heaney, L.; Molur, S. (2016). "Rattus tanezumi". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T19366A115149780. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19366A22445589.en. http://www.iucnredlist.org/details/19366/0. பார்த்த நாள்: 14 December 2017. 
  2. Stuart AM, Prescott CV, Singleton GR, 2008. Biology and management of rodent communities in complex agroecosystems - Lowlands. In: Philippine rats: ecology and management, [ed. by Joshi RC, Singleton GR, Sebastian LS]. Science City of Muñoz, Nueva Ecija, Philippines: Philippine Rice Research Institute. 37-56.
  3. Aplin KP, Suzuki H, Chinen AA, Chesser RT, ten Have J, Donnellan SC, et al. (2011) Multiple Geographic Origins of Commensalism and Complex Dispersal History of Black Rats. PLoS ONE 6(11): e26357. https://doi.org/10.1371/journal.pone.0026357
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனெசுமி_எலி&oldid=4025592" இலிருந்து மீள்விக்கப்பட்டது