தனேசுவர் இசுவைன்

ஒடிசி மர்தலாக் கலைஞர்

தனேசுவர் இசுவைன் ( Dhaneswar Swain; பிறப்பு 18 மே 1953) ஒடிசி பாரம்பரிய இசையின் முதன்மை தாள கருவியான மர்தலா நிபுணரும் குருவும் ஆவார். இவர் தனது தாள இசையமைப்புகள் மற்றும் விரல் உத்திகள் மற்றும் ஒடிசாவின் பாரம்பரிய தாள இசைக்கருவிகளை இணைக்கும் தனி மர்தலா பாராயணம் மற்றும் குழு விளக்கக்காட்சிகளை மேம்படுத்துவதற்கான இவரது முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர்.[1] [2][3] இவர் ஒடிசி மர்தலா மற்றும் ஒடிசாவின் பிற பாரம்பரிய தாளக் கருவிகளில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான வாத்ய வாணி குருகுலத்தின் நிறுவனரும் ஆவார்.[4][5]

வாத்யசிறீ குரு
தனேசுவர் இசுவைன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ଧନେଶ୍ୱର ସ୍ୱାଇଁ
இயற்பெயர்தனேசுவர் இசுவைன்
பிறப்பு(1953-05-18)18 மே 1953
நகந்தாரா, புரி, ஒடிசா
இசை வடிவங்கள்ஒடிசி இசை
தொழில்(கள்)ஒடிசி மர்தலா (ஒடிசி இசை)யின் குரு மற்றும் நிபுணர், இசையமைப்பாளர், அறிஞர்
இசைக்கருவி(கள்)மர்தலா

வரலாறு

தொகு

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள நகந்தாரா கிராமத்தில் சம்புநாத இசுவைன்-காஞ்சனா இசுவைன் ஆகியோருக்கு பிறந்தார். தனது மூத்த சகோதரர் பிரமபர இசுவைனிடம் மர்தலாவில் ஆரம்ப பயிற்சி பெற்றார். பின்னர் 1970 இல் உத்கல் சங்கீத மகாவித்யாலயாவில் சேர்ந்து புகழ்பெற்ற குருக்கள் சிங்காரி சியாம் சுந்தர் கர், வனமாலி மகாராணா குரு மகாதேவ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.[6] புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞர் சோனல் மான்சிங்குடன் ஒரு வருடம் பணிபுரிந்த பிறகு, 1979 இல், மகாவித்யாலயாவில் மர்தலா ஆசிரியராகச் சேர்ந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அங்கு பணியாற்றினார். [4] ஓய்வுக்குப் பிறகு, பூரி மாவட்டம், பிரகோபிந்தாபூரில் உள்ள ராம்ஹரி தாஸ் ஒடிசி குருகுலத்தில் மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஈடுபட்டுள்ளார். [3] இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் (SPIC MACAY) மூலம், ஒடிசி மர்தலாவை நாடு முழுவதும் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்றார்.

நிகழ்ச்சிகள்

தொகு

இவர் 1980களிலிருந்து ஒடிசி நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, முதன்மை தாள வாத்தியக்காரராக இந்தியா முழுவதும்,அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க், நார்வே, பின்லாந்து, சீனா, சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல், துபாய் போன்ற நகரங்களுக்கு பயணம் செய்தார்.[2][4][7]

விருதுகள்

தொகு

ஒடிசி இசை மற்றும் ஒடிசி மர்தாலா ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக, 2008 இல் ஒடிசா சங்கீத நாடக அகாதமி விருதையும், 2013 இல் சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றார் [2]

சான்றுகள்

தொகு
  1. Chakra, Shyamhari (6 September 2020). "Rare honour for Odishi Mardal". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
  2. 2.0 2.1 2.2 "Dhaneswar Swain". Sangeet Natak Akademi. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
  3. 3.0 3.1 Nicodemus, Paul (10 October 2020). "Dhaneswar Swain: A Maestro of Odissi Mardal". The Dance India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
  4. 4.0 4.1 4.2 Vidyarthi, Nita (2014-02-06). "His own beat" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/music/his-own-beat/article5660641.ece. 
  5. Chakra, Shyamhari (2020-11-23). "The missionary mardal maestro". The Samikhsya (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
  6. Chakra, Shyamhari (24 January 2014). "Maestro of the 'mardal'". The Hindu. 
  7. Chakra, Shyamhari (2020-09-04). "Moment of Victory for Odissi Mardal". The Samikhsya (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனேசுவர்_இசுவைன்&oldid=3574160" இலிருந்து மீள்விக்கப்பட்டது