சோனல் மான்சிங்
சோனல் மான்சிங் (Sonal Mansingh பிறப்பு 30 ஏப்ரல் 1944) இந்திய பாரம்பரிய நடன கலைஞர் மற்றும் பரதநாட்டியம் மற்றும் ஒடிசி நடன பாணியின் ஆசிரியர் ஆவார். இந்திய ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் .நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக . நியமிக்கப்பட்டார்.[1][2][3]
சோனல் மான்சிங் | |
---|---|
சோனல் மான்சிங் புதுதில்லியில்.நடனமாடிய காட்சி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சோனல் பாக்வசா |
பிறப்பு | 30 ஏப்ரல் 1942 மும்பை, பிரித்தானிய இந்தியா |
பிறப்பிடம் | இந்தியா |
இசை வடிவங்கள் | Hindustani classical dance |
தொழில்(கள்) | இந்திய நடனக்கலைஞர் |
இசைத்துறையில் | 1961–தற்போதுவரை 14 சூலை, 2018 முதல் ராஜ்யசபாவில் உறுப்பினராக |
இணையதளம் | www.sonalmansingh.in |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுமும்பையில் பிறந்த சோனல் மான்சிங் அரவிந்த் மற்றும் பூர்னிமா பாக்வசா தம்பதியரின் மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாவார். குஜராத் மாநிலத்தின் நன்கு அறிமுகமான சமூக சேவகராக விளங்கும் இவர் 2004 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார். சோனல் மான்சிங்கின் தாத்தா மங்கள் தாஸ் பாக்வசா சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் ஐந்து கவர்னர்களில் ஒருவராவார்.[4] நாக்பூரில் ஒரு ஆசிரியரிடம் நான்கு வயதில் தனது மூத்த சகோதரியுடன் மனிப்புரி நடனத்தை கற்கத் துவங்கினார். ஏழாவது வயதில் மும்பை குமார் ஜெயகார் [5] உட்பட பந்தநல்லூர் நாட்டியப்பள்ளியைச் சேர்ந்த பல்வேறு நடன ஆசிரியர்களிடம் பரதநாட்டியத்தை கற்றார்,[6]
பாரதிய வித்தியா பவனில் சமஸ்கிருதத்தில் பிரவீன் மற்றும் கோவிட் பட்டங்களை பெற்றார். மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் செருமானிய இலக்கியத்தில் பி.ஏ (ஹானர்ஸ்) பட்டத்தை பெற்றார்.
இருப்பினும் அவருடைய முறையான நடனப்பயிற்சி பதினெட்டு வயதில் துவங்கியது.அவரது குடும்பத்தின் எதிர்ப்பு இருந்தபோதிலும் பேராசிரியர் யு. எஸ். கிருஷ்ண ராவ் மற்றும் சந்திரபகா தேவி ஆகியோரிடம் பரதநாட்டியம் கற்றுக்கொள்வதற்காக பெங்களூரு சென்றார்.[7],சென்னை மயிலாப்பூரின் கௌரி அம்மாளிடம் அபிநயங்களை கற்றுத் தேர்ந்த அவர் பின்னர் 1965 ஆம் ஆண்டில் கேளுச்சரண மகோபாத்திரா என்ற புகழ்பெற்ற ஒடிசி கலைஞரிடம் ஒடிசி நடனத்தை கற்கத் துவங்கினார்.
சோனல் மான்சிங் முன்னாள் இந்திய அரசு அதிகாரி லலித் மான்சிங் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.[8] சோனலின் மாமா மாயாதார் மான்சிங் ஒடிசி நடனப் பயிற்சிக்காக கேளுச்சரண மகோபாத்திராவிடம் அறிமுகம் செய்து வைத்தார். .[9]
தொழில் மற்றும் வாழ்க்கை
தொகுசோனல் மான்சிங்கின் நடன வாழ்க்கை 1962 ஆம் ஆண்டில் தொடங்கியது, மும்பையில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்திய அவர் புதுதில்லியில் இந்திய பாரம்பரிய நடன மையத்தை Centre for Indian Classical Dances (CICD) 1977 இல் துவங்கினார்.[10][11] சோனல் கற்றுக் கொண்ட நடனம் பல ஆண்டுகளாக அவரை உலகம் முழுவதும் கொண்டு சென்று [12] பல விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது. 1992 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் [13], 1987 இல் சங்கீத நாடக அகாதமி விருதும்,[14] 2003 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ளார். பாலசரஸ்வதிக்குப் பிறகு இவ்விருதினைப் பெறும் இரண்டாவது பெண் நடனக்கலைஞராக சோனல் மான்சிங் திகழ்கிறார்.[15] தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு மத்தியப் பிரேதச அரசால் காளிதாஸ் சம்மன் கலை விருதும் வழங்கப்பட்டது.2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலத்தின் பண்ட் எனும் இடத்தில் அமைந்துள்ள ஜி.பி. பண்ட் பல்கலைக்கழகத்தால் அறிவிலுக்கான டாக்டர் பட்டமும், சம்பல்பூர் பல்கலைக்கழகத்தால் இலக்கியத்துக்கான டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.[16]
2002 ஆம் ஆண்டில் தனது 40 ஆண்டுகால கலைப்பயணம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், இந்தி திரைப்பட இயக்குநர் பிரகாஷ் ஜா, சோனல் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரித்தார். அப்படம் அந்த ஆண்டின் சிறந்த ஆவணத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றது.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sonal Mansingh, Ram Shakal among four nominated to RS". 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
- ↑ "Former MP Ram Shakal, RSS leader Rakesh Sinha among four nominated to Rajya Sabha". 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
- ↑ "President nominates RSS ideologue Rakesh Sinha among three others to Rajya Sabha". 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
- ↑ Sonal Mansingh University of Alberta website, www.ualberta.ca.
- ↑ Sonal Mansingh: The dance of life தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 9 November 2003.
- ↑ National centre for the performing Arts. Quarterly journal. v.12-13, page 3
- ↑ Sonal Mansingh nrcw.nic.in.
- ↑ "The art of diplomacy". இந்தியன் எக்சுபிரசு. 31 Oct 1999. http://www.indianexpress.com/Storyold/129791/. பார்த்த நாள்: 29 May 2012.
- ↑ "Sonal Mansingh". iloveindia.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2012.
- ↑ Biography பரணிடப்பட்டது 2009-07-28 at the வந்தவழி இயந்திரம் Official website.
- ↑ Sonal Mansingh பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Interview
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ Awards Odissi பரணிடப்பட்டது 2018-08-16 at the வந்தவழி இயந்திரம் Sangeet Natak Akademi official website.
- ↑ Sonal
- ↑ String of awards for Sonal Mansingh[தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து, 27 April 2007.
- ↑ "Sonal". Archived from the original on 2019-06-26. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.