தன்மை (இலக்கணம்)

மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவர் அல்லது எழுதுபவர் தன்னையோ, தன்னையும் உள்ளடக்கிய பலரையோ குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் தன்மை என்பதனுள் அடங்கும்.

பெயர்ச் சொற்கள்

தொகு

தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் பின்வருவன தன்மைச் சொற்களாகும்.

  • நான் - (ஒருமை)
  • யான் - (ஒருமை)
  • நாம் - (பன்மை)
  • யாம் - (பன்மை)
  • நாங்கள் - (பன்மை)
  • யாங்கள் - (பன்மை)

வேற்றுமை உருபேற்றம்

தொகு

வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது மேற்படி சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.

வேற்றுமை உருபு சொல்
1 - நான் நாம் நாங்கள்
2 என்னை எம்மை நம்மை எங்களை
3 ஆல் என்னால் எம்மால் நம்மால் எங்களால்
4 கு எனக்கு எமக்கு நமக்கு எங்களுக்கு
5 இன் என்னின் எம்மின் நம்மின் எங்களின்
6 அது எனது எமது நமது எங்களது

வினைச் சொற்கள்

தொகு

தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறும். இவற்றுள் தன்மை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

- இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம்
ஒருமை செய்தேன் செய்கிறேன் செய்வேன்
பன்மை செய்தோம் செய்கிறோம் செய்வோம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்மை_(இலக்கணம்)&oldid=1562182" இலிருந்து மீள்விக்கப்பட்டது