தன் வினைவேகமாற்றி

சில வினைகளில் உருவாகும் விளைபொருள்களுள் ஒன்று வினைவேகமாற்றியாகச் செயல்படுகிறது. அத்தகைய வினைவேகமாற்றி தன் வினைவேகமாற்றி (Auto catalyst) என்றும் அச்செயல்முறை தன் வினைவேக மாற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. தன் வினைவேக மாற்றத்திற்கான சான்று பின்வருமாறு.

1. ஆக்சாலிக் அமிலத்தைப் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மூலம் ஆக்சிசனேற்றம் செய்யும் போது உருவாகும் விளை பொருள்களுள் ஒன்றான மாங்கனீசு சல்ஃபேட் வினைவேகமாற்றியாகச் செயல்படுகிறது. மேலும் இது ஊக்க வினைவேகமாற்றியாகச் செயலாற்றுகிறது.

5 (C2O4H2) + 2 KMnO4 + 3 H2SO4 → 2 MnSO4 + K2SO4 + 10 CO2 + 8 H2O

உசாத்துணைதொகு

  1. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்_வினைவேகமாற்றி&oldid=3215111" இருந்து மீள்விக்கப்பட்டது