தமன் பிரசஸ்தி அருங்காட்சியகம், ஜகார்த்தா
தமன் பிரசஸ்தி அருங்காட்சியகம் (Museum Taman Prasasti) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில்அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் முன்னர் ஒரு கல்லறையாக இருந்தது, டச்சு காலனித்துவ அரசாங்கத்தால் 1795 ஆம் ஆண்டில் மதிப்பு வாய்ந்த டச்சுக்காரர்களுக்கான இறுதி ஓய்வுக்கான இடமாக கட்டப்பட்டிருந்தது. கல்லறைப் பகுதியில் முக்கியமான நபர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் பிரித்தானிய கவர்னர் ஜெனரல் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸின் முதல் மனைவியான ஒலிவியா மரியம்னே ராஃபிள்ஸ் மற்றும் இந்தோனேசிய இளைஞர் ஆர்வலரான சோ ஹோக் கீ ஆகியோரின் கல்லறைகளும் உள்ளன.[1]
அருங்காட்சியக முகப்புத் தோற்றம் | |
நிறுவப்பட்டது | சூலை 9, 1977 |
---|---|
அமைவிடம் | ஜேஎல்l. தனா அபங்க் 1, எண். 1, ஜகார்த்தா 10130, இந்தோனேசியா |
வகை | திறந்த வெளி அருங்காட்சியகம் |
ஜகார்த்தாவில் உள்ள ல்லறை பகுதிகளில் இதுவும் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள ஃபோர்ட் கேனிங் பார்க் (1926), சிட்னியில் உள்ள கோர் ஹில் கல்லறை (1868), பெரே லாச்செய்ஸ் கல்லறை (1803), பாரிசில் உள்ள பேரே லாச்சாய்ஸ் கல்லறை, கேம்பிரிட்ஜில் உள்ள மௌண்ட் அபர்ண் கல்லறை (1831), மச்சாசுசெட்ஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் உலகின் நவீன கல்லறைகளுள் இது பழமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.[2]
வரலாறு
தொகுஇந்தக் கல்லறையானது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 28, 1797 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்ட போதிலும், 1795 ஆம் ஆண்டிலேயே மக்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்தக் கல்லறை கெபன் ஜாஹே கோபர் என்று அழைக்கப்பட்டது (டிசம்பர் 14, 1798 ஆம் நாள் முதல் இந்த பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்). இது கெர்கோஃப்லானில் என்ற இடத்தில் மொத்தம் 5.9 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டு அமைந்துள்ளது. படேவியாவில் அக்காலகட்டத்தில் ஏற்பட்ட ஒரு நோய் காரணமாக அதிகரித்து வரும் இறப்புகளைச் சமாளிப்பதற்காக ஒரு கல்லறை கட்டப்பட்டது. இந்த நோய்ப் பரவல் காரணமாக, புதிய டச்சு தேவாலயத்தின் கல்லறை பகுதி (டச்சு நியுவே ஹாலண்ட்ஷே கெர்க், இப்போது வயாங் அருங்காட்சியகம்), பின்னென்கெர்க் (போர்த்துகீசிய தேவாலயத்தில் உள்ள ஒரு உள் நகரம்), மற்றும் சியோன் சர்ச் (போர்த்துகீசிய தேவாலயத்தில் உள்ள ஒரு வெளி நகரம்) ஆகியவை நிரம்ப ஆரம்பித்தன. இதன் காரணமாக, இந்த கல்லறைகளில் இருந்து சில கல்லறைகள் கெபோ ஜாஹே கோபர் கல்லறைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன.[1]
கெபன் ஜாஹே கோபர் கல்லறை காளி க்ருகுட் நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த நதி ஒரு காலத்தில் இறந்தவர்களை படகு வழியாக கல்லறைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வழியாக பயன்படுத்தப்பட்டது.
இந்தோனேசியா நாட்டிற்குச் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த பூங்கா ஒரு கிறிஸ்தவ கல்லறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல் இரண்டு ஆண்டுகளில் இது வெர்பெர்க் அறக்கட்டளையால் நிர்வகித்து வரப்பட்டது, அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இது பாலாங் ஹிட்டாம் அறக்கட்டளையால் நிர்வாகம் செய்யப்பட்டது.[1]
1967 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை கல்லறையை ஜகார்த்தா அடக்கம் நிறுவனம் நிர்வகித்து வந்தது. 1975 ஆம் ஆண்டில், மத்திய ஜகார்த்தா மேயர் அலுவலகத்தை நிர்மாணம் செய்வதற்காக கல்லறை மூடப்பட்டது. உள்ளூர் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், சில சடலங்கள் உறவினர்களால் அகற்றப்பட்டன. வேறு சிலரின் சடலங்கள் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள தனா குசீர் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறாக இடம் மாற்றம் செய்யப்பட்டபோது பல கல்லறைகளில் இருந்த, சிற்பங்கள் மற்றும் சிலைகள் அகற்றப்பட்டு சேதமடைந்தன. தற்போது அவற்றில் 32 கல்லறைகள் மட்டுமே முன்பிருந்தபடியே அதே நிலையில் உள்ளன. கல்லறையின் பரப்பளவானது 5.9 ஹெக்டேர் நிலத்திலிருந்து 1.3 ஹெக்டேருக்குக் குறைந்து போனது.சுமார் 4,200 கற்களில் 1,372 கற்கள் மட்டுமே கல்லறையில் வைக்க தேர்வு செய்யப்பட்டன.[1]
இந்த கல்லறையானது ஜூலை 9, 1977 ஆம் நாளன்று ஜகார்த்தாவின் முன்னாள் கவர்னரான அலி சாதிகின் அவர்களால் தமன் பிரசஸ்தி அருங்காட்சியகமாக அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டு முதல், இந்த அருங்காட்சியகம் ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியக நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பிடத்தக்கவை
தொகு- எம்ஜிஆர். அடாமி கரோலி கிளாசென்ஸ், படேவியாவின் கத்தோலிக்க அப்போஸ்தலிக் விகாரியாட்.
- டச்சு கிழக்கிந்திய டைரக்டர் ஜெனரல் அட்ரியன் ஓஸ்ட்வால்ட் (1674-டிசம்பர் 30, 1734).
- ஆண்ட்ரியாஸ் விக்டர் மைக்கேல்ஸ்
- ஹெர்மனஸ் ஃபிரடெரிக் ரோல் (தற்போது இந்தோனேசியா பல்கலைக்கழகம் எனஅழைக்கப்படும் ஸ்டோவா மருத்துவப் பள்ளியின் நிறுவனர்)
- ஜோஹன் ஹார்மன் ருடால்ப் கோஹ்லர்
- இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இந்து சிலைகளை சேகரித்த டச்சு எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜான் லாரன்ஸ் ஆண்ட்ரீஸ் பிராண்டஸ் (1857-ஜூன் 26, 1905).
- மிஸ் ரிபோட், 1930 களின் கலைஞர்.
- பிரித்தானிய கவர்னர் ஜெனரல் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸின் முதல் மனைவியானஒலிவியா மரியம்னே ராஃபிள்ஸ் (நவம்பர் 23, 1814 இல் இறந்தார்)
- பீட்டர் எபர்வெல்ட்
- இந்தோனேசிய ஆர்வலர் சோ ஹோக் கீ .
- எம்ஜிஆர் . வால்டரஸ் ஜேக்கபஸ் ஸ்டால். எஸ்.ஜே., கத்தோலிக்க பிஷப்
- தொல்பொருள் ஆய்வாளரும், இந்துக் கடவுளான ராமரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியவருமானவில்லெம் ஃபிரடெரிக் ஸ்டட்டர்ஹெய்ம்.