தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியப் பட்டயப் பயிற்சியானது (D.El.Ed) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கக்கூடிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் 32 மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க சேர்க்கை உள்ள 12 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடு மற்றும் பயன்களைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

தொகு

இந்நிறுவனங்கள் மாவட்டத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் 32 மாவட்டத்திலும் 32 நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிறுவனங்களில் பணிபுரியும் முதல்வர், முதுநிலை விரிவுரையாளர் மற்றும் விரிவுரையாளர்கள் அடிப்படைக் கல்வித் தகுதியாக கலை அல்லது அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டம் உடன் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். திறன் வாய்ந்தக் கல்வியாளர்களைக் கொண்டு இரண்டாண்டு ஆசிரியப் பட்டய பயிற்சியானது அளிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

தொகு

இந்நிறுவனங்கள் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் அதிகமாக வாழக்கூடிய பின்வரும் 7 மாவட்டங்களி்ல் 2016-2017 ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.[1] அவ்வாறு தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அதிகமாக வாழும் 7 மாவட்டங்களாவன:

  1. நாகப்பட்டினம் மாவட்டம்
  2. காஞ்சிபுரம் மாவட்டம்
  3. திருவாருர் மாவட்டம்
  4. கடலுார் மாவட்டம்
  5. விழுப்புரம் மாவட்டம்
  6. நீலகிரி மாவட்டம்
  7. பெரம்பலுார் மாவட்டம்

இந்நிறுவனங்களிலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் போன்று அதேக் கல்வித் தகுதியுடன் முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்.

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

தொகு

இந்நிறுவனங்கள் தமிழகத்தில் பின்வரும் 8 மாவட்டங்களில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனங்களில் பணிபுரியும் கல்வியாளர்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் போன்று அதே கல்வித் தகுதியுடன் முதல்வர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் என்று அழைக்கப்படுகின்றனர்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.