தமிழகத்தில் கிரேக்கக் காசுகள்
தமிழக்த்தில் கிடைத்த கிரேக்கக் காசுகளின் பழமை பொ.மு. 300 வரை செல்லும். மேலும் கிடைத்துள்ள காசுகள் பல எந்த நகரத்தில் அச்சிட்டது என்பதை கூட அறிய முடிகிறது.[1] கரூர் நகரிலே அதிகக் காசுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
காசுகள்
தொகுஅச்சிட்ட இடம் | காலம்/எண்ணிக்கை | மற்ற குறிப்புகள் |
---|---|---|
ரோட்சு தீவுகள் | பொ.மு. 200 (2 காசுகள்) | செப்பு, 1 கிராம், 11 மி.மீ. விட்டம், இரு காசுகளிலும் பின்பக்கத்தில் ரோசாப்பூவும் முன்பக்கத்தில் ஒரு காசில் கெலியாசு கடவுளும், மற்றொரு காசில் பெண் கடவுளும் உளது. |
கிறீட்சு தீவு | பொ.மு.200 (1 காசு) | செப்பு, 17 மி.மீ. விட்டம் முன்பக்கத்தில் மனிதத் தலையும் பின் பக்கத்தில் காளை உருவமும் உளது. |
திரேசு தீவுகள் | பொ.மு.200 (1 காசு) | கிரேக்க கடவுள்கள் |
தெசிசு தீவுகள் | பொ.மு.200 (1 காசு) | முன்பக்கம் சியசு கடவுளும், பின்பக்கம் ஆட்டுக்கிடாயும் உளது. |
செலியூசிட் குடும்பம்
தொகுகிரேக்க மன்னர் அலெக்சாண்டர் மரணத்துக்குப்பின் டைகிடிசு நதியில் ஆதிக்கம் செலுத்திய செலியூசிட் வம்சத்தவர் வெளியிட்ட 10 காசுகள் கரூர் நகர அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்துளன. இவற்றில் கிரேக்க தெய்வங்களான அதேனா, சியசு, மன்னர் இரண்டாம் செலியூசிட் ஆகிய உருவங்களும் உளது.[2]
உறுதி
தொகுஇவற்றை கொண்டு கரூர் நகரை மையமாக கொண்ட வர்த்தகத்தில் கரூரிலிருந்து சேரர் துறைமுகம் முசிறிக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பின் மெசப்பத்தோமியா நகரங்களுக்கு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டது என்ற கருதுகோளை உறுதிப்படுத்தலாம்.
மேற்கோள்கள்
தொகுமூலம்
தொகு- பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.