தமிழகத்தில் பினீசியக் காசுகள்

பண்டைத்தமிழகத்தில் பினீசியரின் வாணிபம் நடந்ததை உறுதிப்படுத்தும் வண்ணம் 4 நாணயங்கள் கரூர் நகரில் கிடைத்துளது.[1] இவ்வனைத்து காசுகளும் செப்பு உலோகத்தால் ஆனவை. இவற்றின் விட்டம் 9 செ.மீ. முதல் 1.5 செ.மீ. வரை மாறுபடுகிறது. அவ்வாறே இவற்றின் எடையும் 900 கிராம் முதல் 1550 கிராம் வரை மாறுபடுகின்றன. இவற்றின் முன்பக்கத்தில் கிரேக்க தெய்வங்களும் பின்பக்கம் கப்பலின் முன்பகுதி, தண்டு ஆகியனவும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Coins from Phoenicia found at Karur in Studies in south Indian coins, Volume 4 பக்கம் - 19-27, Krishnamurthy R. 1994,

மூலம்

தொகு
  • பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.