தமிழர் பண்பாடும் தத்துவமும் (நூல்)
தமிழர் பண்பாடும் தத்துவமும், நா. வானமாமலை எழுதிய ஆய்வு நூலாகும். பண்பாடு மற்றும் தத்துவம் என்னும் இரு பரிமாணங்களில் தமிழரின் வாழ்வினை பகுப்பாய்வு செய்து வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டது. தமிழர் பண்பாடும் தத்துவமும்’ என்ற பெயரில், 6 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலின் முதல் பதிப்பு 1973'ஆம் வருடம் டிசம்பர் மாதம் வெளி வந்தது.
தமிழர் பண்பாடும் தத்துவமும் | |
---|---|
நூல் பெயர்: | தமிழர் பண்பாடும் தத்துவமும் |
ஆசிரியர்(கள்): | நா. வானமாமலை |
வகை: | பண்பாடு |
துறை: | மொழி |
இடம்: | சென்னை 600 098 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 192 |
பதிப்பகர்: | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் |
பதிப்பு: | மூன்றாம் பதிப்பு 2008 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
"சிந்தனையை எழுப்பி ஆராய்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கிற இந்நூல் கட்டுரைகள், அறிவுக்கு விருந்தாக உள்ளன. இது போன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச்சில, பயனுள்ள நல்ல நூல் என்று இதனை வாசகர்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்" என்று இதற்கு அணிந்துரை எழுதிய மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்..
பண்பாடு என்னும் தலைப்பில், முருக-ஸ்கந்த இணைப்பு, பரிபாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலக படிப்புகளின் கதைகள் என்னும் தலைப்பில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன
தத்துவம் என்னும் தலைப்பில், மாநிலமேகலையின் பௌத்தம், பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதவாத கருத்துக்கள், பரபக்க லோகாயுதம் என்னும் தலைப்பில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இந்திய பொருள்முதல் வாத தத்துவத்தைப் பற்றி வடமொழி சான்றுகளிலிருந்து ஆதாரங்கள் திரட்டி எழுதப்பட்ட காலகட்டத்தில், தென்னிந்தியாவில் குறிப்பாக பழந்திமிழ் நூல்களின் காணும் நேரடிச் சான்றுகளை தொகுத்து , தமிழ்நாட்டில் வழங்கும் உலகாயுத தத்துவத்தினை ஆராய முற்படும் முயற்சியினை இந்நூலினில் குறிப்பிடுகிறார்.
இந்த நூலினை 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை' .வெளியிட்டுள்ளனர்.[1] இது தமிழிணைய மின்னுலகத்தில் இணையவெளியில் படிக்கக் கிடைக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "எமதுள்ளம் சுடர் விடுக 44: தமிழர் பண்பாடும் தத்துவமும்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-04-20.