தமிழர் போரியல்
பிற மனித குழுக்கள் போலவே தமிழர் வாழ்விலும் போர் ஒரு தொடர் அம்சமாக இருக்கின்றது. தமிழர் தம்மிடையேயும் பிறருடனும் போர் செய்தற்கான காரணங்கள், தமிழர் போர் மரபுகள், தமிழர் போர் நுட்பங்கள் மற்றும் உத்திகள், தமிழ் போர் சாதிகள், தமிழர் சம்பந்தப்பட்ட போர் வரலாறு, தற்கால ஈழப்போர் ஆகியவற்றை ஆயும் இயல் தமிழர் போரியல் எனலாம்.
வரலாறு
தொகுதமிழர் தொல்காப்பியக் காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும், அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர்.[1]
" வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய" - தொல்காப்பியம், பொரு. மரபி. 628.
பண்டைக்காலத்தில் நிலப்படையானது நான்கு வகைகளாகக் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: கரிப்படை (யானைப்படை), பரிப்படை (குதிரைப்படை), தேர்ப்படை, காலாட்படை என்பன.
தமிழர் மரபுசார் போர்க்கருவிகள்
தொகுமுதன்மைக் கருவிகள்
தொகு- வாள்
- வில்
- வேல்
மற்றயவை
தொகுவளரி, அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை
படை வீடு
தொகுபோரில் வென்றபின் வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர். அப்படைவீடு சிதைந்த போர்க்கருவிகளைக் கொண்டு கட்டப்பட்டு இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ முனைவர் மு. பழனியப்பன், தமிழர் மரபுசார் போர்க்கருவிகள், தமிழர் மரபுச் செல்வங்கள் - அறிவியல் தொழில்நுட்பம் - 2, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, பக்கம் 174