தமிழர் மரவேலைக்கலை
தமிழர் மரபுத் தொழில்கலைகளில் மரவேலைக்கலையும் ஒன்று. மரத்தினால் தளபாடங்கள், சிற்பங்கள், கருவிகள் (எ.கா. ஏர்), வீடு, தேர், கப்பல் ஆகியவற்றை செய்வதில் தொன்ம காலம் முதல் தமிழர்கள் சிறப்பாக ஈடுபட்டு தனித்துவான கலையை வளர்தெடுத்துள்ளார்கள். இதுவே தமிழர் மரவேலைக்கலை எனப்படுகின்றது. இதை தமிழ்ர் தச்சுக்கலை என்றும் அழைக்கலாம். மரவேலைகலையில் ஈடுபடுவோர் தச்சர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
தமிழ் இலக்கியத்தில் மரவேலைக்கலை
தொகுஅண்மைக்காலம் வரை மரவேலைக்கலை பற்றிய துறைசார் சுவடிகளோ அல்லது நூல்களோ தமிழில் வெளிவரவில்லை. பொதுவான இலக்கியங்களில் உள்ள குறிப்புகளைக் கொண்டே பண்டை, இடைக்கால மரவேலைக்கலை பற்றி அறியமுடிகிறது.
சங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையில் இடம்பெறும் பின்வரும் பாடல் சிறுவர்கள் நடக்கப் பயன்படுத்திய முக்கால் சிறுதேர் பற்றிக் குறிப்பிடுகிறது.[1]
- பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
- முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும்
அக்காலச் தச்சர்கள் தனது குழந்தைகளுக்கு சிறுநடைவண்டிகளை செய்து தந்தனர் என்று பின்வரும் பெரும்பாணாற்றுப்படை பாடல் குறிப்பிடுகிறது.[2]
- தச்சச் சிறார் நச்சப் புனைந்த
- ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர்
மரப்பொருட்கள்
தொகு- தளவாடங்கள்
- மேசை
- கதிரை
- இருக்கை
- பெட்டி
- அலமாரி
- சிற்ப வேலைப்பாடுகள்
- தேர், சப்பரம், கடவுளர் வாகங்கல்
- மாட்டுக் கொட்டில்
- வீடு
- கதவு, சாளரம்
- பாக்கு உரல், இடியப்ப உரல், அச்சு உரல்
- திருகுவலை
- ஊன்று கோல்கள்
- கூரை வேலைப்பாடுகள்
- மரச் சிற்பங்கள்
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம்.
வெளி இணைப்புகள்
தொகு- கைப்பணிச் சொற்றொகுதி 2 - (தமிழில்)