தமிழியலாக்கம்
தமிழியலாக்கம் (Tamilization) என்பது இந்தியாவின் தென்பகுதியும் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளையும் புர்வீகமாகக் கொண்ட தமிழர் தங்கள் கலாச்சாரத்தை விரிபுபடுத்துதலைக் குறிக்கும்.[1][2]
சங்க காலம் தரும் மூலங்களின் அடிப்படையில், தமிழரின் பாரம்பரிய தாயகப்பகுதிகளாக தற்போதுள்ள மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, இலட்சத்தீவுகள், தென் கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகள் இருந்துள்ளன. அத்துடன் இலங்கை (இலங்கைத் தமிழர்), மாலைத்தீவுகள் (Giravarus) ஆகிய இடங்களிலும் பண்டைய தமிழர் குடியேற்றங்கள் காணப்பட்டன. ஆயினும், பொ.ஊ. 2 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிகளில் தமிழர் வர்த்தக குடியிருப்புக்கள் தென்மேற்கு ஆசியாவின் பல இடங்களிலும், தென்கிழக்காசியா, எகிப்து ஆகிய பகுதிகளிலும் இந்திய உபகண்டத்திற்கு வெளியே உருவாக்கப்பட்டன.
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணம் பகுதியில் இருந்து அதிக எண்ணிக்கையான தமிழர் மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, சீசெல்சு, தென்னாப்பிரிக்கா, மத்திய இலங்கை, ரியூனியன், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிஜி, கயானா ஆகிய இடங்களுக்கு வேலை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டனர். அதிகளவான வாணிப வகுப்புத் தமிழர் மியான்மர், இலங்கை, தென்கிழக்காசியா, பாரசீக வளைகுடா நாடுகளில் காணப்படுகின்றன.
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Dharna against 'Tamilisation'of KGF – Deccan Herald". cscsarchive.org.
Tamilisation of bangalore
[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Sri Lanka: Sinhalisation of the North and Tamilisation of the South : paths2people". Paths2People. Archived from the original on 2015-02-01. பார்க்கப்பட்ட நாள் 2016-11-24.
Tamilisation of southern sri lanka