தமிழீழ காவல்துறை

தமிழீழ காவல்துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட காவல்துறை ஆகும்.

தமிழீழ காவல்துறை

1991, நவம்பர் 19 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது. மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தமிழீழ எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது இவர்கள் செயற்பட்டுள்ளனர். காவல் துறையின் பிரிவுகள். குற்றபிரிவு / விசேட குற்றபிரிவு /போக்குவரத்து பிரிவு /புலனாய்வுபிரிவு /தமிழீழ தேசிய தலைவரின் நேரடி விசாரைண பிரிவு /ஆளணி மற்றும் நிர்வாக பிரிவு /விசேட தாக்குதல் பிரிவு /மக்கள் பொதுநல சேவை பிரிவு போன்றன இயங்கின தமிழீழ காவல் துறை தேசிய தலைவர் பிரபாகரன் நேரடி வழிகாட்டலில் இயங்கியது இதற்கு பொறுப்பாளர்களாக பா.நடேசனும்.பின்னர் இளங்கோ என்ற ரமேசும். இயங்கினர்.



2009, மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து தமிழீழ காவல்துறை செயலிழந்தது.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழீழ_காவல்துறை&oldid=3941642" இலிருந்து மீள்விக்கப்பட்டது