தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்

தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது.[1].

  1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)
  2. தர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)
  3. தர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது.
(முன்பு C & D Class).

உண்மை நகல் எனச் சான்று செய்யும் அதிகாரம் தொகு

01-01-1996 முதல் ரூபாய் 9,300/-ம் அதற்கு மேலும் அடிப்படை ஊதியம் (Basic Pay) பெறும் அரசு அலுவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அனைத்து சான்றிதழ்களுக்கு உண்மை நகல் என கையொப்பமிட்டு சான்று (Attestation) செய்யும் அதிகாரம் அரசு வழங்கி இருந்தது.[2]. தற்போது இவ்வதிகாரம், 01-01-2006 முதல் தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 4,500/-ம் அதற்கு மேலும் பெறுபவர்களுக்கு மட்டுமே உண்டு.[3].

மேற்கோள்கள் தொகு

  1. Classification of Employees (Government Order No. 296 Finace (Allowance) Department, dated 13-07-2009
  2. தமிழக அரசாணை எண் 71, ( P & AR) நாள் 05-02-1996
  3. http://tnpaycommissionarrears.blogspot.in/

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு