தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் (Tamilnadu Government Servants` Conduct Rules) என்பது தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், ஊழியர்களின் சட்ட பூர்வமான குடும்ப உறுப்பினர்களை வகைப்படுத்தல், அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கூட்டுறவு சங்கங்களில் பங்கேற்றல், அரசு தொடர்பற்ற தனிப்பட்ட தொழில் அல்லது வேலை செய்தல், ஏலச் சீட்டு கட்டுதல், வரதட்சனை, கொடை, பரிசுகள் வாங்குதல், பணியில் இருக்கும் போது உயர்கல்வி பயிலல், வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டு வாங்குதல், [1]. அலுவல் நேரங்களில் ஆர்ப்பாட்டம் (Demonstration) செய்தல், சங்க சந்தா வசூலித்தல், முதலீடுகள் செய்தல் மற்றும் கடன் வாங்குதல்; கொடுத்தல், வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தல், அரசியல் கட்சியில் சேர்தல் மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல், சாதி சங்கங்களில் உறுப்பினராதல், இருதார திருமனம் புரிதல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், போதைதரும் மருந்துகள்/பானங்கள் அருந்துதல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான இயக்கங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கெடுத்தல் போன்றவைகள் குறித்தான நடத்தை விதிகள் விரிவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.[2].

  • மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.

அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள் தொகு

அரசு ஊழியர்கள் தங்களின் அசையும்; அசையாச் சொத்துகள், நகைகள், செலுத்திய காப்பீட்டு கட்டணங்கள், வங்கி வைப்புகள், சேமநல நிதி (Provident Fund), கடன்களும் பொறுப்புகளும் (Loans and Liabilities) குறித்தான முழு விவரங்கள், முதன் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தவுடனும், பின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பின் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒராண்டு முன்னரும் குறிப்பிட்ட படிவங்களில் தங்களது சொத்து-பொறுப்பு பட்டியல்களை (Assets and Liabilities Statements) அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.[3].

தண்டனைகள் தொகு

அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது துறை சார்ந்த (Departmental Action) நடவடிக்கை எடுத்து உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tnpsc.gov.in/t_nadu%20govt%20servants%20conduct%20rules.pdf பரணிடப்பட்டது 2014-10-21 at the வந்தவழி இயந்திரம் THE TAMIL NADU GOVERNMENT SERVANTS' CONDUCT RULES, 1973 (Corrected Upto 9th March, 2010) பார்க்க: பக்கம் 37
  2. http://www.tnpsc.gov.in/t_nadu%20govt%20servants%20conduct%20rules.pdf பரணிடப்பட்டது 2014-10-21 at the வந்தவழி இயந்திரம் THE TAMIL NADU GOVERNMENT SERVANTS' CONDUCT RULES, 1973 (Corrected Upto 9th March, 2010)
  3. http://www.tnpsc.gov.in/t_nadu%20govt%20servants%20conduct%20rules.pdf பரணிடப்பட்டது 2014-10-21 at the வந்தவழி இயந்திரம் THE TAMIL NADU GOVERNMENT SERVANTS' CONDUCT RULES, 1973 (Corrected Upto 9th March, 2010) - பார்க்க: பக்கம் 29 முதல் 36 முடிய

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு