தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருந்த பல்லவ நாடு, பாண்டிய நாடு, சோழப் பேரரசுப் பகுதிகளில்

  1. முதலாவது பாண்டியர்கள்
  2. சோழப்பேரரசர்கள்
  3. சேரப்பேரரசர்கள்
  4. பிற்காலப் பாண்டியர்கள்
  5. பல்லவ மன்னர்கள்
  6. மதுரை நாயக்கர்கள்
  7. தஞ்சை நாயக்கர்கள்
  8. தஞ்சாவூர் மராத்திய அரசு

என்ற அரச வம்சத்தினர் ஆண்டு வந்திருக்கின்றனர். அந்த அரச வம்சங்களின் பட்டியல்:

பல்லவ மன்னர்கள்

தொகு
 
பல்லவ மன்னர்கள்

தமிழகத்தில் பல்லவ அரசின் மன்னர்களாக இருந்தவர்கள்.

  1. சிம்ம வர்மன்
  2. சிம்ம விஷ்ணு (557-590)
    1. பீமவர்மன்
  3. மகேந்திர வர்மன் I (590-630)
    1. புத்த வர்மன்
  4. நரசிம்ம வர்மன் I (630-668)
    1. ஆதித்திய வர்மன்
  5. மகேந்திர வர்மன் II (668-670)
    1. கோவிந்த வர்மன்
  6. பரமேஸ்வர வர்மன் I (670-690)
  7. ராஜசிம்மன் (690-725)
  8. பரமேஸ்வர வர்மன் II (725-731)
  9. நந்தி வர்மன் II (731-796)
  10. தந்தி வர்மன் (796-846)
  11. நந்தி வர்மன் III (846-869)
  12. நிருபதுங்க வர்மன் (865-890)
  13. அபராஜிதன் (870-890)

முதலாவது பாண்டியர்கள்

தொகு
 
முதலாவது பாண்டிய மன்னர்கள்

தமிழ்நாட்டில் பாண்டிய நாட்டை ஆண்ட முதலாவது பாண்டிய மன்னர்கள்:

  1. கடுங்கோன் (575 - 600)
  2. மாறவர்மன் அவனிசூளாமணி (600 - 620)
  3. சடையவர்மன் செழியன் சேந்தன் (620 - 642)
  4. மாறவர்மன் அரிகேசரி (642 - 700)
  5. கோச்சடையன் இரணதீரன் (700 - 730)
  6. மாறவர்மன் இராஜசிம்மன் (730 - 765)
  7. பராந்தக நெடுஞ்சடையன் (765 - 815)
  8. ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் (815 - 862)
  9. வரகுணன் II (862 - 885)
  10. பராந்தகப் பாண்டியன் (850 - 907)
  11. இராஜசிம்மன் II (907 - 931)
  12. வீரபாண்டியன் (946 - 966)

சோழப் பேரரசர்கள்

தொகு
 

சோழநாட்டின் பேரரசர்களாக இருந்தவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  1. விஜயாலய சோழன் (846 - 881)
  2. ஆதித்தியன் (880 - 907)
  3. பராந்தகன் (907 - 955)
  4. கண்டராதித்தியன் (955 – 957)
  5. அரிஞ்சயன் (957)
  6. சுந்தரசோழ பராந்தகன் (957 - 985)
  7. உத்தம சோழன் (973 - 989)
  8. இராஜராஜன் (985-1012)(மகள்)
  9. இராஜேந்திரன் (1012-1044) (மகள்)
  10. இராஜாதிராஜன் (1018-1054)
  11. இராஜேந்திரன் II (1052-1064) (மகள்)
  12. வீரராஜேந்திரன் (1063-1069)

சாளுக்கிய சோழர் தோற்றம்

தொகு

சோழர்களில் இருந்து சாளுக்கிய சோழர் எனும் புது வம்சம் தோன்றியது

  1. குந்தவை - விமலாதித்யன் (கீழைச் சாளுக்கியர்)
  2. அம்மங்கைதேவி - ராஜேந்திரன்
  3. இராஜேந்திரன்
  4. மதுராந்தகி - குலோத்துங்கன்

சாளுக்கிய சோழர்கள்

தொகு

சாளுக்கிய சோழர்களில் இருந்து மன்னர்களாக வந்தவர்களின் பட்டியல்:

  1. குலோத்துங்கன் (1070 - 1120)
  2. விக்கிரம சோழன் (1120 - 1133)
  3. குலோத்துங்கன் II (1133 - 1150)
  4. இராஜராஜன் II (1150 - 1173)
  5. இராஜாதிராஜன் II (1173 - 1178)
  6. குலோத்துங்கன் III (1178 - 1218)
  7. இராஜராஜன் III (1218 - 1246)
  8. இராஜேந்திரன் III (1246 - 1257)

இலங்கை சோழர்கள்

தொகு
  1. குளக்கோட்ட சோழர்
  2. எல்லாள சோழன்

பிற்காலப் பாண்டியர்கள்

தொகு
 

பிற்காலப் பாண்டிய வம்ச மன்னர்களாகக் கீழ்கண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்.

  1. விக்கிரம பாண்டியன் (- 1179)
  2. சடையவர்மன் குலசேகரன் (1190 - 1216)
  3. மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 - 1238)
  4. மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1239 - 1251)
  5. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251 - 1284)
  6. சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1268 - 1311)
  7. வீரபாண்டியன் -சுந்தரபாண்டியன்

நாயக்கர்கள்

தொகு

நாயக்கர் வம்சத்தை இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.

  1. மதுரை நாயக்கர்கள்
  2. தஞ்சாவூர் நாயக்கர்கள்

மதுரை நாயக்கர்கள்

தொகு

மதுரை நாயக்கர் ஆட்சி நாகம நாயக்கர் என்பவரிலிருந்து தொடங்குகிறது.

  1. விசுவநாத நாயக்கர் (1529 - 1564)
  2. கிருட்டிணப்ப நாயக்கர் (1564 - 1572)
  3. வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
  4. கிருட்டிணப்ப நாயக்கர் II (1595 - 1601)
    1. கசுதூரி அரங்கன்
  5. விசுவப்பர்
  6. முத்துக்கிருட்டிணப்ப நாயக்கர் (1601 - 1609)
  7. முத்து வீரப்ப நாயக்கர் I (1595 - 1601)
    1. குமார முத்து
  8. திருமலை நாயக்கர் (1623 - 1659)
  9. முத்து வீரப்ப நாயக்கர் II (1659)
  10. சொக்கநாத நாயக்கர்
    1. முத்துலிங்க நாயக்கர்
  11. முத்து வீரப்ப நாயக்கர் III (1662 - 1689)
  12. இராணி மங்கம்மாள் (1689 - 1706)
  13. விசயரங்க சொக்கநாத நாயக்கர் (1706 - 1731)
  14. மீனாட்சி (1731 - 1739)

தஞ்சை நாயக்கர்கள்

தொகு
 

தஞ்சையை ஆண்ட நாயக்கர்களின் பட்டியல்:

  1. சேவப்ப நாயக்கர் (1532 - 1560)
  2. அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600)
  3. இரகுநாத நாயக்கர் (1600 - 1633)
  4. விசயராகவ நாயக்கர் (1633 - 1673)
  5. அழகிரி நாயக்கர் (மதுரை நாயக்கர்கள் பரம்பரை) (1674 - 1675)
  6. செங்கமல தாசு (1675)
    1. மன்னாரு தாசு

ஆதாரம்

தொகு
  • டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல்