தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்
இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி மருத்துவம் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் இளம்நிலை ஓமியோபதி மருத்துவம் (ஆங்கிலம்: Bachelour of Homoeopathic Medicine and Surgery) இளநிலைப் பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான, [மதுரை மாவட்டம்]], திருமங்கலத்தில் ஆண்டுக்கு 50 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆத்தூர், நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோனேரிப்பட்டி, சென்னையிலுள்ள போரூர், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பூந்தண்டலம், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் இரண்டு கல்லூரிகள் என மொத்தம் எட்டு சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசுக் கல்லூரியில் ஆண்டுக்கு 50 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 400 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் என மொத்தம் 450 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன.