தமிழ்நாடு சர்க்கரைக் கழகம்

தமிழ் நாடு சர்க்கரைக் கழகம் (Tamil Nadu Sugar Corporation Limited-TASCO) என்பது இந்தியாவில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு சார்பாக செயல்படுகிறது. இது சர்க்கரை, வெல்லம் மற்றும் மின்சார சக்தி உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

தமிழ் நாடு சக்கரைக் கழகம் வரையறுக்கப்பட்டது
வகைதமிழ்நாடு அரசு நிறுவனம்
நிறுவுகை1974
தலைமையகம்ஆவின் இல்லம் முதல் தளம்,3A பசும்பொன் முத்து ராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை - 600 035, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
தொழில்துறை[சர்க்கரை உற்பத்தி]
இணையத்தளம்[1]

வரலாறு தொகு

நலிவுற்ற சர்க்கரை ஆலைகளை அரசு எடுத்து நடத்துவதற்காக தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (TNSCO) 1974 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் நாடு சக்கரைக் கழகத்தின் பணிகள் தொகு

தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் கீழ் அறிஞா் அண்ணா சர்க்கரை ஆலை மற்றும் மதுரா சர்க்கரை ஆலை என இரு ஆலைகள் இருந்தன. இதில் மதுரா சர்க்கரை ஆலை மூடப்பட்டுவிட்டது.

மதுரா சர்க்கரை ஆலை தொகு

  • அமைவிடம் - பாண்டியராஜபுரம், மதுரை
  • நிலை - கரும்புவரத்து குறைந்ததால் நீண்டகாலமாக மூடப்பட்டது.

அறிஞா் அண்ணா சர்க்கரை ஆலை தொகு

  • இடம் - குருங்குளம் மேல்பதி கிராமம், கந்தர்வக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்
  • தொடக்கம் - 1976 - 1977
  • கொள்ளளவு - 2500 டிசிடி
  • இது பொதுத்துறை சர்க்கரை ஆலை ஆகும்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலை தொகு

பெரம்பலூர் சர்க்கரை ஆலையானது, தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் துணை நிறுவனம் ஆகும்.

  • இடம் - எறையூர் பெம்பலூர் மாவட்டம்
  • தொடக்கம் - 28-02-1978
  • கொள்ளளவு - 2500 டிசிடி

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு