தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம்
தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் (Tamilnadu Nurses and Midwives Council) 1926-ல் ஆரம்பிக்கபட்டது. இது தமிழ்நாடு செவிலியர்களின் பதிவு மற்றும் படிப்பு கல்வி நிலையங்களுக்கு அனுமதி வழங்கும் குழுமம் ஆகும். இக் குழுவில், செவிலியர் மற்றும் தாதியர் (மகப்பேறு செவிலியர்), செவிலிய உதவியாளர் மற்றும் பல்நோக்கு மருத்துவப் பணியாளர், மருத்துவக் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிவு செய்து கொள்ளலாம். முதன்முதலாக இந்தியாவில் இத்தகு குழுமம் தமிழகத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது[1].
பணிகள்
தொகுதமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் கீழ்வரும் செயற்பாடுகளைக் கொண்டுள்ளது[2].
- சட்டப்படி செவிலியர் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது
- தகுதி பெற்ற செவிலியர்களைப் பதிவு செய்து, மாநில அளவில் இத்தகு பதிவுகளைப் பராமரித்தல்
- இந்திய அளவில் பிற மாநிலங்களிலுள்ள செவிலியர் குழுமங்களுடன் தொடர்புகளைப் பேணுதல்
- தொழில் நெறிமுறைகளைக் கண்காணித்து, தவறிழைப்பவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "HISTORY OF TAMILNADU NURSES AND MIDWIVES COUNCIL FROM INCEPTION (1928)". Tamil Nadu Nurses & Midwives Council. 2014. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Functions of The Council". Tamil Nadu Nurses & Midwives Council. 2014. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)