தமிழ்நாடு பள்ளிக் கல்வி

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி கீழ்காணும் வழிமுறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை

  1. மாநில அரசுக் கல்வித் திட்டம்
  2. மத்திய அரசுக் கல்வித் திட்டம்

மாநில அரசுக் கல்வித் திட்டம்

தொகு

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டம் இரண்டு வழியாக இருக்கிறது. அவை

  1. மாநிலக் கல்வி முறை
  2. மெட்ரிக் கல்வி முறை

மாநிலக் கல்வி முறை

தொகு

மாநிலக் கல்வி முறைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் தமிழை பயிற்று மொழிப் பாடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் வைக்கப்படுகின்றன. மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் மாநிலத்தின் எல்லைப்பகுதியிலுள்ள பகுதிகளில் மலையாளம் , தெலுங்கு , கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் போன்ற பாடங்கள் சிறப்புப் பாடங்களாகவும் அமைக்கப்பட்டு அதன் வழியாகவும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 6 ஆம் வகுப்புக்கு மேலான உயர் வகுப்புகளில் ஆங்கிலம் வழியாக கல்வி கற்கும் திட்டமும் குறிப்பிட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கல்வித் திட்டம்

  1. தொடக்கக் கல்வி
  2. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிக் கல்வி

என்கிற இரு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தொடக்கக் கல்வி

தொகு

ஒன்றிலிருந்து ஐந்து வகுப்பு வரை மட்டும் உள்ள பள்ளிகள் தொடக்கப் பள்ளிகள் என்றும், ஒன்றிலிருந்து எட்டு வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் என்றும் பிரிக்கப்பட்டு இவை தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உயர் மற்றும் மேல்நிலைக் கல்வி

தொகு

ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் என்றும், ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

மெட்ரிக் கல்வி முறை

தொகு

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள ஆங்கில வழியில் மட்டும் கற்கும் பள்ளிகளுக்கு இந்தக் கல்வி முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தக் கல்வித் திட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு மட்டும் பொதுவான மெட்ரிக் கல்விப் பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. பிற வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளியின் ஆசிரியர்கள் அல்லது நிர்வாகம் தேர்வு செய்யப்படும் பாடத்திட்டங்களே நடைமுறையில் இருக்கிறது. பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடத் திட்டங்கள் மாநிலக் கல்வி முறைத் திட்டத்திலிருக்கும் பாடங்கள் ஆங்கில வழியில் இருக்கிறது.

மத்திய அரசுக் கல்வித் திட்டம்

தொகு

இந்திய அரசின் கல்வித் திட்டம் புதுடெல்லியிலுள்ள “மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம்” எனும் அரசு அமைப்பின் பாடமுறையைக் கொண்டு சில பள்ளிகள் இயங்கி வருகின்றன.

பள்ளிக் கல்வி நிர்வாகம்

தொகு

இந்தப் பள்ளிக் கல்விக் கூடங்கள் நிர்வாகம் செய்யப்பட்டு வரும் முறையைக் கொண்டு மூன்று முறைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

  1. அரசு பள்ளிகள்
  2. அரசு உதவி பெறும் பள்ளிகள்
  3. சுயநிதிப் பள்ளிகள்

அரசு பள்ளிகள்

தொகு

தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் அல்லது அரசின் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி , நகராட்சி , ஊராட்சி ஒன்றியங்கள் போன்றவற்றின் கீழாக அல்லது பிற அரசுத் துறைகளின் கீழ் உள்ள நிர்வாக அமைப்புகளின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளிகள் அரசு பள்ளிகள் எனப்படுகின்றன.

அரசு உதவி பெறும் பள்ளிகள்

தொகு

தனியார் அறக்கட்டளைகள், சங்கங்கள் போன்றவற்றின் நிர்வாகத்தில் அரசின் கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் சில பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு இணையாக சம்பளம் மற்றும் உதவிகள் அரசால் அளிக்கப்படுகின்றன. இந்தப் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றழைக்கப்படுகின்றன.

சுயநிதிப் பள்ளிகள்

தொகு

தனியார் அறக்கட்டளைகள், சங்கங்கள் போன்றவற்றின் முழுமையான நிர்வாகத்தில் நடத்தப்படும் பள்ளிகள் “சுயநிதிப் பள்ளிகள்” என்றழைக்கப்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் தமிழக் அரசு ஆண்டுதோறும் அறிவிக்கும் கட்டணத்தை வசூலித்துக் கொண்டும், அப்பள்ளியினை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பின் தங்கியுள்ள மாணவர்களூக்கு இப்ப்ள்ளிகளில் விண்ணப்பித்தால் அவர்களுக்கு 25% ஒதுக்கீட்டின் படி ஆர்.டி.இ. கட்டாயகல்வி விதியின்படி தங்கள் பள்ளியில் இலவசமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்

இதனையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_பள்ளிக்_கல்வி&oldid=3006322" இலிருந்து மீள்விக்கப்பட்டது