தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகம்
(தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University—TNJFU) என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் ஆகும்.[2] இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்கள்
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைகற்றல், கண்டுபிடித்தல், மேம்படுத்தல்
வகைதமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2012
நிறுவுனர்ஜெ. ஜெயலலிதா
வேந்தர்தமிழக ஆளுநர்
துணை வேந்தர்முனைவர் என். பெலிக்சு[1]
அமைவிடம், ,
10°49′21″N 79°49′59″E / 10.8226°N 79.8331°E / 10.8226; 79.8331
சுருக்கப் பெயர்த.நா.ஜெ.மீ.ப
இணையதளம்tnjfu.ac.in

படிப்புகள்

தொகு

இப்பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளது. மாணவர்கள் இப்பல்கலைகழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

  1. நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc) .
  2. எட்டு படிப்புகளில் இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc)
  3. நான்கு படிப்புகளில், மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு[3]

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள்

தொகு
எண். கல்லூரியின் பெயர் இடம் மாவட்டம் இணைப்பு நிறுவிய ஆண்டு இணையதளம்
1 மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 1977 [4]
2 மீன்வள தொழில்நுட்ப கழகம் பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2012 [5]
3 மீன்வள பொறியியல் கல்லூரி நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2012 [6]
4 டாக்டர். எம்ஜீஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தலைஞாயிறு நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2017 [7]
5 மீன்வள முதுகலை கல்வி நிறுவனம் வன்னியஞ்சாவடி காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2017 [8]
6 மீன்வள உயிரிதொழில்நுட்ப கல்லூரி வன்னியஞ்சாவடி காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2017 [9]
7 மீன்வள வணிகப்பள்ளி வன்னியஞ்சாவடி காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2018-19 [10]
8 மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி மாதவரம் சென்னை தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2018 [11]
9 ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் கல்லூரி நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2019 [12]
10 மீன்வளக் கடல் தொழில்நுட்பக் கல்லூரி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2019 [13]
எண். இயக்குனரகம் பெயர் இடம் மாவட்டம் இணைப்பு நிறுவிய ஆண்டு இணையதளம்
1 வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு தஞ்சாவூர் மையம் சூரக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2001 [14]
2 வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு பரக்கை மையம் பரக்கை கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2002 [15]

பிற மையங்கள்

தொகு

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளது.

  1. பணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
  2. மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம், (FITT) சென்னை http://www.tnfu.org.in/university/wp/?page_id=3683

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.thehindu.com/news/national/tamil-nadu/fisheries-university-gets-new-vc/article67614454.ece
  2. "Tamil Nadu Fisheries University Act, 2012" (PDF). www.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 September 2012.
  3. http://www.tnfu.org.in/university/wp/?page_id=25
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-10. பார்க்கப்பட்ட நாள் 2015-05-06.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-11. பார்க்கப்பட்ட நாள் 2015-05-06.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-10. பார்க்கப்பட்ட நாள் 2015-05-06.
  7. https://www.tnjfu.ac.in/fcrithalainayar/aboutus.php
  8. https://www.tnjfu.ac.in/ipgsomr/
  9. https://www.tnjfu.ac.in/ifbtomr/
  10. https://www.tnjfu.ac.in/fbsomr/
  11. http://www.tnfu.org.in/university/wp/?page_id=3128
  12. https://www.tnjfu.ac.in/ceee/
  13. https://www.tnjfu.ac.in/cfntthoothukudi/
  14. https://www.tnjfu.ac.in/directorates/dsa/thanjavurcesa/
  15. https://www.tnjfu.ac.in/directorates/dsa/kkparakaicesa/

வெளி இணைப்புகள்

தொகு