தமிழ்நாடு வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரி தமிழ்நாடு அரசுக் கல்லூரியாகும். இக்கல்லூரியில் வனவியல் குறித்த இளம் அறிவியல், முது அறிவியல் மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பட்டப்படிப்புகள் உள்ளன.