தமிழ்நாட்டில் கிரானைட் ஊழல்

கிரானைட் ஊழல் என்பது தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு பெரு ஊழலாகும்.[1] இந்த ஊழலானது மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியராக இருந்த உ. சகாயம் அவா்கள் மாநில தொழில் துறையின் முதன்மைச் செயலருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் 2012 ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. அக்கடிதத்தில் அவா் மதுரை மாவட்டத்தில் இயங்கும் பல கிரானைட் குவாாிகள் சுமாா் பதினாறு ஆயிரம் கோடிக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தயுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் முதலமைச்சருக்கு அனுப்பிய புகாரை அடுத்து 2012 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெறுகிறது.[2] சட்ட விரோத சுரங்கங்களினால் ஏற்பட்ட இழப்பு சுமாா் 16,000 கோடி அளவில் இருக்குமென ஆரம்ப மதிப்பீட்டு அறிக்கை தொிவிக்கிறது.[2]அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கனிமவளங்கள் லிமிடெட் நிறுவனத்தின் (TAMIN) சில அதிகாரிகள், கிரானைட் கம்பனிகளின் விதிமீறல்களுக்குத் துணைபோனதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.[2] சட்டவிரோத மணல் மற்றும் கிரானைட் சுரங்க கம்பெனிகளின் உாிமையாளா்களான பலா், முன்னாள் மத்திய அமைச்சா் திரு.எம்.கே.அழகிாியின் மகன் தயாநிதி அழகிாி உட்பட கைது செய்யப்பட்டுள்ளனா்.[2]

ஊழலை அம்பலப்படுத்திய கடிதம்

தொகு

மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகாவில் உள்ள மூன்று பெரிய கிரானைட் ஆப்பரேட்டர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை சுட்டிக் காட்டி 2012 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி திரு சகாயம் அவா்களால் எழுதப்பட்ட கடிதம் அதே ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியில் கசிந்தது. அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று கிரானைட் நிறுவனங்கள் PRP எக்ஸ்போா்ட்ஸ், ஒலிம்பஸ் கிரானைட் மற்றும் சிந்து கிரானைட் ஆகியவை. விவசாயிகள் மற்றும் பிற கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை எவ்வாறு இழந்தனர் மற்றும் எப்படி பல ஆண்டுகளாக வருவாய் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அதிகாரிகளிடம் இருந்து கிரானைட் கம்பனிகள் தங்கள் கொள்ளையைத் தொடர முடிந்தது என்பதை இந்த கடிதம் அம்பலப்படுத்தியது.

விசாரணை

தொகு

மதுரா மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவால் உருவாக்கப்பட்டுள்ள அதிகாாிகளைக் கொண்ட பதினெட்டு குழுவினா், ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாவட்டத்தில் 175 குவாாிகளில் ஆய்வை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர், பி.ஆர்.பீ. எக்ஸ்போா்ட்டின் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் மேலுாாிலுள்ள மதுரா கிரானைட்டின் உாிமையாளா் பன்னீர் முகமது ஆகியோா் காவல் துறையினாிடம் சரணடைந்தனர்.[3] இதன் எதிரொலியாக மாநில அரசு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு வட்டாட்சியா், ஒரு துணை வட்டாட்சியா் உட்பட ஒன்பது அதிகாாிகளை இடை நீக்கம் செய்தது.[4] தமிழ்நாடு கனிமவளங்களின் ஒரு மூத்த எழுத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.[5] இந்த ஊழலில் அரசு அலுவலா்களின் பங்கு ஏதேனும் உள்ளதா என்பதை அறியும் பொருட்டு மதுரை ஆட்சியா் அன்சுல் மிஸ்ரா தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியைக் கேட்டுக் கொண்டாா்.[6]

இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்த பின்னா், தமிழ்நாடு அரசு வருமான வரித்துறையுட் இணைந்து மாநில முழுவதும் மற்ற மாவட்டங்களில் சோதனை நடத்தியது.

மதிப்பீடு

தொகு

அப்போதைய மதுரை ஆட்சியா் சகாயம் அனுப்பிய ஆரம்ப அறிக்கை மாநில அரசாங்கத்திற்கு சுமாா் 1,600 கோடி அளவுக்கு இழப்பு இருக்கும் என தொிவித்திருந்தது. தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் சிலர், இழப்புக்கள் 1 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.[7]

குற்றவாளிகள்

தொகு

PRP எக்ஸ்போா்ட்ஸ் உரிமையாளர் திரு.பி.ஆா்.பழனிச்சாமி மற்றும் அரசியல் தொடர்புகள் கொண்ட ஒரு கோடீஸ்வரா் ஆகியோா் கைது செய்யப்பட்டதுடன் அவரது நிறுவனமும் மூடப்பட்டது.[7] முன்னாள் மத்திய அமைச்சா் திரு.எம்.கே.அழகிாியின் மகன் துரை தயாநிதியின் நிறுவனமாகக் கருதப்படும் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனமும் சட்ட விரோத குவாாிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.[7] 84 தனியார் குவாரிகளும் உரிம நிபந்தனைகளையும் மீறி சட்ட விரோத சுரங்கத்தில் ஈடுபட்டுள்ளதாக யு.சகாயத்தின் அறிக்கை கூறுகிறது.[8]

விசாரணையில் முன்னேற்றம்

தொகு

பி.ஆர்.பழனிச்சாமி(வயது 60), அவரது இரண்டு மகன்கள் பி.செந்தில் குமார் (வயது 37), பி சுரேஷ் குமார் (31 வயது), மருமகன் மகாராஜன் (25 வயது) ஆகியோர் கீழவளவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோாி மதுரை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.[9] தயாநிதி அழகிாியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.[9]

முன் ஜாமீன் வழங்கிய பிறகு, டிசம்பர் 14, 2012 அன்று மேலுாா் நீதிமன்றத்திற்கு முன் தயாநிதி அழகிரி சரணடைந்தார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. Correspondent, Special. "Granite scam cases: HC ruling on State appeals" (in en). The Hindu. http://www.thehindu.com/news/cities/Madurai/Granite-scam-cases-HC-ruling-on-State-appeals/article14503792.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 NDTV 2 September 2012.
  3. "Another granite owner surrenders before police". Times Of India. 2012-08-24 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103114200/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-24/madurai/33365877_1_illegal-granite-prp-granites-police-custody. 
  4. "Nine officials suspended in Madurai granite scam". Times Of India. 2012-08-23 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103124411/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-23/madurai/33341004_1_deputy-tahsildar-pattas-melur. 
  5. "TAMIN clerk held; inspector suspended". The New Indian Express. 2012-08-25 இம் மூலத்தில் இருந்து 20 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141220144905/http://www.newindianexpress.com/states/tamil_nadu/article595494.ece. 
  6. S. Vijay Kumar (2012-08-29). "States / Tamil Nadu : DVAC launches detailed enquiry into granite scam in Madurai". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3832795.ece. 
  7. 7.0 7.1 7.2 The Pioneer 4 September 2012.
  8. http://www.newindianexpress.com/cities/chennai/84-Private-Quarries-Violated-Licence-Norms-Says-Report/2015/11/27/article3148827.ece
  9. 9.0 9.1 The Times of India 9 August 2012.
  10. M. Vandhana (2012-12-14). "Durai Dhayanidhi surrenders in Melur magistrate court". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/alagiris-son-surrenders-in-granite-scam-case/article4199378.ece.