தேபேந்திரநாத் சாரங்கி
தேபேந்திரநாத் சாரங்கி (Debendranath Sarangi) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1977-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2]
தேபேந்திரநாத் சாரங்கி | |
---|---|
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் | |
பதவியில் 16 ஏப்ரல் 2011 – 31 டிசம்பர் 2012 | |
முன்னையவர் | எஸ். மாலதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கட்டக், ஒடிசா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இ. ஆ. ப |
இணையத்தளம் | தமிழ்நாடு தலைமை செயலகம் |
அரசுப் பணிகள்
தொகு1977 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எஸ். மாலதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து, தமிழகத்தின் 40-வது தலைமைச் செயலாளராக 16 ஏப்ரல் 2011 அன்று பொறுப்பேற்றார். 2012-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆலோசகராக இருந்த இவர் இரண்டு மாதங்கள் கழித்து அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ தேபேந்திரநாத் சாரங்கி புதிய தலைமைச்செயலர். தினமலர் நாளிதழ். 16 மே 2011.
- ↑ Debendranath Sarangi, new Chief Secretary. The Hindu. 16 May 2011.
- ↑ Sarangi appointed as advisor to TN govt. The Hindu Business Line. December 31, 2012.
- ↑ தேபேந்திரநாத் சாரங்கி திடீர் விடுவிப்பு. விகடன் இதழ். 1 மார்ச் 2013.
{{cite book}}
: Check date values in:|year=
(help)