எஸ். மாலதி (S. Malathi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1977-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2]

எஸ். மாலதி
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
1 செப்டம்பர் 2010 – 16 மே 2011
முன்னையவர்கே. எஸ். ஶ்ரீபதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1954
தஞ்சாவூர், தமிழ்நாடு இந்தியா
இறப்பு25 மார்ச் 2012 (அகவை 57)
தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பெற்றோர்சுவாமிநாதன்
ராஜம்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

வாழக்கை குறிப்புகள்

தொகு

இவர் 1954 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார்.இவரது தந்தை சுவாமிநாதன் கர்நாடகத்தில், தொலைத் தொடர்புத்துறையில் உயர் பதவியில் இருந்தவர். அங்கு வசித்ததால் இவருக்கு தமிழ், ஆங்கிலம், கன்னடம் நன்றாகத் தெரியும். அதேபோல இந்தியிலும் புலமை பெற்றவர்.

கல்வி

தொகு

இவர் விலங்கியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பிரிட்டனில் நிதி குறித்த பட்டயப் படிப்பைப் படித்தார்.

அரசுப் பணிகள்

தொகு

1977 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார்.திருச்சியில் உதவி ஆட்சியராக  தனது பணியைத் தொடங்கினார்.1987-ம் ஆண்டில் வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.உள்துறை செயலாளர் உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கே. எஸ். ஶ்ரீபதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழகத்தின் 39-வது தலைமைச் செயலாளராக 1 செப்டம்பர் 2010 அன்று பொறுப்பேற்றார். 2011-ம் ஆண்டு மே 16-ம் தேதி பணியில் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.[3]

மறைவு

தொகு

2003ம் ஆண்டு முதல் மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சையுடன் பணியையும் தொடர்ந்தார்.அவரது பதவிக்காலம் 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இருந்த நிலையில், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் தனது 57 வயதில் 25 மார்ச் 2012 அன்று காலை 9.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Malathi, new Chief Secretary. The Hindu. 31 Aug 2010.
  2. புதிய தலைமைச் செயலர் மாலதி. தினமணி நாளிதழ். 20 செப்டம்பர் 2012. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. தமிழக தலைமைச் செயலர் எஸ்.மாலதி மாற்றம்!. விகடன் இதழ். 16 மே 11. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. Former Chief Secretary Malathi succumbs to cancer. The Hindu. 25 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._மாலதி&oldid=3855504" இலிருந்து மீள்விக்கப்பட்டது