தமிழ்ப்பெருங்களஞ்சியம்


தமிழ்ப்பெருங்களஞ்சியம் என்பது தமிழ்நாடு அரசு நடத்தும் ஒரு தகவல் களஞ்சிய வலைப்பக்கமாகும். இது தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணைய கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் ஏறத்தாழ 67,500 கட்டுரைகள் உள்ளன.[1]

தமிழ்ப்பெருங்களஞ்சியம்
வலைத்தள வகைதகவல் களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தமிழ்
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
வெளியீடு2016
உரலிwww.tamilkalanjiyam.in

உள்ளடக்கம்

தொகு

தமிழ்ப்பெருங்களஞ்சியத் தளத்தில் கல்வியியல், கணிப்பொறியியல், மின்னணுவியல், வேளாண்மை, மீன்வளத்துறை, சங்க இலக்கியம், நாடகவியல் என்ற பகுப்புகளில் செய்திகள் உள்ளன. மேலும் இந்த கலைக்களஞ்சியத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், தமிழ் வளர்ச்சித்துறை, இதர அரசு துறைகள் சேகரித்துள்ள அரிய நூல்களில் உள்ள தகவல்களை சேர்த்து வருகிறார்கள் இதுதவிர, தமிழகத்தில் மொத்தமுள்ள 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 10,000 ஊராட்சிகள், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 38,800 கோயில்களில் 18,928 கோயில்களின் அடிப்படைத் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன மீதமுள்ள கோயில்களின் தகவல்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

யாவரும் தொகுக்கும் வசதி

தொகு

இதில் விக்கிபீடியாவைப் போலவே இணையப்பரப்பில் தமிழை, வலுப்படுத்த விரும்பும் தன்னார்வலர்கள் யார் வேண்டுமானாலும் தமிழ் கலைக்களஞ்சியத்தின் உள்ளே நுழைந்து பல தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்கலாம், திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

மேற்கோள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்பெருங்களஞ்சியம்&oldid=3392065" இலிருந்து மீள்விக்கப்பட்டது