தமிழ் இலக்கிய வரலாறு (சி. பாலசுப்பிரமணியன் நூல்)
தமிழ் இலக்கிய வரலாறு என்பது சி. பாலசுப்பிரமணியன் என்பவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தினை வரலாற்று ரீதியாக ஆராயும் நூலாகும். [1]
தமிழ் இலக்கிய வரலாறு | |
---|---|
நூல் பெயர்: | தமிழ் இலக்கிய வரலாறு |
ஆசிரியர்(கள்): | சி. பாலசுப்பிரமணியன் |
வகை: | மொழி |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 600 029 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 408 |
பதிப்பகர்: | நறுமலர்ப்பதிப்பகம் |
பதிப்பு: | 21ஆம் பதிப்பு 1992 |
அமைப்பு
தொகுஇந்நூல் பழமையும் சிறப்பும், சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்ற நிலையில் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்கிறது. இந்நூல் மு. வரதராசனின் அணிந்துரையைக் கொண்டுள்ளது.
பிற்சேர்க்கை
தொகுநூலின் பிற்சேர்க்கையாக ஐரோப்பியர் வருகை, அச்சு இயந்திரத்தின் தோற்றம், இந்திய நாட்டின் விடுதலை இயக்கமும் தமிழ்நாட்டில் அதன் செல்வாக்கும், சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள், வினாத்தாள்கள் போன்றவை அமைந்துள்ளன.
உசாத்துணை
தொகு'தமிழ் இலக்கிய வரலாறு', நூல், (1992; நறுமலர்ப்பதிப்பகம், சென்னை 600 029, விற்பனை உரிமை பாரி நிலையம்)