தமிழ் சூழ் நிலம்

தமிழ் நிலம் என்பது செந்தமிழ் நிலம், அதனைச் சூழ்ந்திருக்கும் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டது. இந்தத் தமிழ் நிலத்தைச் சூழ்ந்திருந்த நிலங்களாக நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் காலத்தில் இருந்த நிலங்கள் 17. இவை தமிழ்சூழ் பதினேழ் நிலம் என ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

அடிக்குறிப்பு

தொகு
    • 17 தமிழொழி நிலம்
    சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக்,குடகம்
    கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம்,வங்கம்,
    கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம்,
    தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே (மயிலைநாதர் மேற்கோள் காட்டியுள்ள கட்டளைக்கலித்துறைப் பாடல்)
    அருமணம், காம்போசம், ஈழம், கூவிளம், பல்லவமங்கம் இந்த 17 நாடுகளுக்குள் அடங்கும் நாடுகளின் மாற்றுப்பெயர்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_சூழ்_நிலம்&oldid=1868691" இலிருந்து மீள்விக்கப்பட்டது