தமிழ் நாடக ஆய்வு
தமிழ் நாடக ஆய்வு என்பது கூத்தையும் தமிழ் நாடகத்தையும் ஆய்வுப் பொருளாக எடுத்து ஆய்வு செய்தல் ஆகும். இது நாடக நிலைநின்ற கலைத்துறை ஆய்வையும், "நாடகத்தை சமூக நிறுவனமாகப் பார்த்து" முன்னெடுக்கப்படும் ஆய்வுகளையும் குறிக்கும்.[1] தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் கூத்தையும் நாடகத்தைப் பற்றிய குறிப்புகள், படைப்புகள், ஆதாரங்கள் சங்ககாலம் முதற்கொண்டு கிடைக்கின்றன. எனினும் திறனாய்வு முறையிலான ஆய்வுகள் 19 ம் நூற்றாண்டிலேயே தொடங்கின.
ஆதாரங்கள்
தொகு- இலக்கிய, இலக்கண ஆதாரங்கள்
- சிலப்பதிகாரம்
- கூத்த நூல்
- இன்று கிடைக்காத நூல்கள்:
:* முறுவல், :* சயந்தம், :* செயற்றியம், :* குணநூல், :* பரதம்
- கல்வெட்டுக்கள்
- கலை மரபுகள்
- வாய்மொழி வரலாறு
முக்கிய ஆய்வுகள்
தொகு- கூத்த நூல்
- 1897 - நாடகவியல் - பரிதிமாற் கலைஞர்
- மதங்க சூளாமணி - விபுலானந்தர்
- 1962 - நாடகத் தமிழ் - பம்மல் சம்பந்த முதலியார்
- 1969 - Drama in Ancient Tamil Society - கா. சிவத்தம்பி - (ஆங்கில மொழியில்)
- 1986 - மலேசியாவில் மேடை நாடகங்கள் - அ. மணிசேகரன்
- ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி - க. சொக்கலிங்கம்
- நாடகம் - அரங்கியல் - சி. மெளனகுரு
- சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007 - ச. வரதன்