தமிழ் பேசு தங்கக் காசு

தமிழ் பேச தங்கக் காசு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு போட்டி நிகழ்ச்சியாகும். தனித்தமிழில் உரையாடுவதே இந்த நிகழ்ச்சி. வெற்றியாளர்கள் தங்கக் காசினைப் பரிசாகப் பெறுவர்.

இந்த நிகழ்ச்சி மூன்று சுற்றுக்களைக் கொண்டது.

முதல் சுற்றில் சுமார் இரண்டு நிமிடம் ஜேம்ஸ் வசந்தனுடன் உரையாட வேண்டும்,

  • ஒரே வார்த்தையை மூன்று தடவைக்கு மேல் பயன் படுத்தாமல்
  • ஒரே சொல்லில் பதில் சொல்லாமல்
  • தொடர்ந்து மூன்று வினாடிகளுக்கு மௌனம் காக்காமல்
  • ஆங்கிலம் கலக்காமல்.


இரண்டாம் சுற்றில், ழகர, தகர, ரகர உச்சரிப்புகளால் நிறைந்த சொற்றொடர் ஒன்றைக் காட்டி அதை மனனம் செய்து முப்பது நொடிக்குள் எட்டு அல்லது பத்து முறை சொல்லச் சொல்கிறார்கள்.

இறுதிச் சுற்று, ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு கூறுவது.

இதே விதிமுறைகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வானொலியில் பல ஆண்டுகளாக போட்டி நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்ற இந்நிகழ்ச்சியை கே. எஸ். ராஜா, பி. எச். அப்துல் ஹமீட் போன்றோர் தயாரித்து வழங்கியிருந்தார்கள்.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_பேசு_தங்கக்_காசு&oldid=1294429" இலிருந்து மீள்விக்கப்பட்டது