கே. எஸ். ராஜா

கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா அல்லது கே.எஸ்.ராஜா (K. S. Raja) (8 பெப்ரவரி 1942 - 3 செப்டம்பர் 1994[1]) முன்னர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர் ஆவார்.[1] இவர் பொதுவாக மின்னல் வேக அறிவிப்பாளர் எனவும் அழைக்கப்பட்டிருந்தார். வானொலி அறிவிப்பில் முதலில் வேகத்தை கொண்டு வந்தவர் இவர்.

கே. எஸ். ராஜா
K.S.Rajah
பிறப்பு (1942-02-08)8 பெப்ரவரி 1942
பதுளை, இலங்கை
இறப்பு 3 செப்டம்பர் 1994(1994-09-03) (அகவை 52)
கொழும்பு
தொழில் ஊடகவியலாளர்
இனம் இலங்கைத் தமிழர்
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) பிரபல வானொலி அறிவிப்பாளர்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

ராஜாவின் இயற்பெயர் ஸ்ரீஸ்கந்தராஜா. இவர் இலங்கையின் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் இலங்கையின் மலையகத்தில் பதுளையில் பிறந்தார்.[2] யாழ்ப்பாணம் கொட்டடியில் வளர்ந்தார். தந்தை ஒரு மருத்துவர். தாயார் ஆசிரியை. தமக்கைமார் நால்வரும் மருத்துவர்கள்.[3] 1966 இல் கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அங்கு அவர் மாணவர் பேரவைத் தலைவராக இருந்து செயற்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார்.[3] இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், வானொலி ஆர்வத்தின் காரணமாக இலங்கை வானொலியில் பணியில் சேர்ந்தார்.[3]

இலங்கை வானொலியில்

தொகு

இவர் இலங்கை வானொலியில் முன்னணி அறிவிப்பாளராக இருந்தபோது பல வானொலி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரின் நிகழ்ச்சிகளுக்கு கடல் கடந்து தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர்.[4]

படுகொலை

தொகு

1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்ற இவர் அப்போது அங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார். இந்நிலையில் இவர் 1994 செப்டம்பர் 3 அன்று[5] இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

கொலை பற்றிய கருத்துக்கள்

தொகு

ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரி. மதிவாணன் என்பவர் தெற்காசிய ஊடக சேவை (South Asian Media Service - SAMS)க்கு அளித்த பேட்டியில் கே. எஸ். ராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.[6] இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவிய போது அவர் இக்குற்றச்சாட்டை நேரடியாக மறுக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைச் செய்யப்பட்டதாக கருதப்படும் சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டினார்.[7]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tombstone Inscription[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ராமகிருஷ்ணன் (1980களின் ஆரம்பத்தில்). "இலங்கை வானொலி கே. எஸ். ராஜா பேட்டி". தினமலர். 
  3. 3.0 3.1 3.2 சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..!, விகடன் பொக்கிஷம், 1986, பி.இளங்கோவன், ஆர்.தேன்மொழி
  4. "Radio Rage". The Hindu. 25 August 2003. Archived from the original on 19 ஆகஸ்ட் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2006. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |= ignored (help)
  5. "கே. எஸ். ராஜா என்ற மகா ஆகிருதி". வண்ன வானவில். செப்டம்பர் 2012. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_2012.09. 
  6. "Armed EPDP is a Threat to Peace". tamilcanadian.com. Archived from the original on 28 September 2011.
  7. "Ask Douglas Devananda questions series". lacnet.org. Archived from the original on 23 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2006. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._ராஜா&oldid=3641294" இலிருந்து மீள்விக்கப்பட்டது