தம்பிலுவில் மத்திய கல்லூரி


தம்பிலுவில் மத்திய கல்லூரி (முன்னாள் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்) கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். சுமார் 60 கல்விசார் ஊழியர்களைக் கொண்ட, இப்பாடசாலை, தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை கொண்டிருக்கின்றது. நீண்ட கால வரலாறு கொண்ட குறித்த பாடசாலை, அண்மையில் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.[2][3]

தம்பிலுவில் மத்திய கல்லூரி
[[படிமம்:|250px|தம்பிலுவில் மத்திய கல்லூரி]]
தம்பிலுவில் மத்திய கல்லூரி
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் கற்றவனாயிரு நல்லவனாயிரு,
()
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு மாகாணம்
மாவட்டம் அம்பாறை மாவட்டம்
நகரம் தம்பிலுவில்
இதர தரவுகள்
அதிபர் திரு.வ.ஜயந்தன்
மாணவர்கள் 1500+ ()
ஆரம்பம் 1944[1]
www.tmmv.thambiluvil.info.

வரலாறு தொகு

திண்ணைப்பள்ளி முறைமையைக் கொண்டிருந்த தம்பிலுவில் கிராமத்தில், மெதடிஸ்த மிசனரிகளால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நவீனக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றுவரை, தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயமாகப் பணியாற்றும் மெதடிஸ்த ஆண்கள் பாடசாலை ஒன்று 1877இல் ஆரம்பிக்கப்பட்டதுடன், 1879இல் மெதடிஸ்த பெண்கள் பாடசாலை ஒன்றும் (இன்றைய கலைமகள் வித்தியாலயம்) அங்கு ஆரம்பிக்கப்பட்டது. 73 மாணவிகளுடன், அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னணிப் பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாக, அப்பாடசாலை விளங்கியதை, அம்மதகுருமாரின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.[4]

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இவ்வூரிலும் பரவியது. இக்கிராமத்தைச் சேர்ந்த திரு.ஏ.நடராசா எனும் செல்வந்த்ர், தம்பிலுவில் அம்மன் ஆலயத்தின் எதிரே 1944இல் ஒரு சைவப்பள்ளியை அமைத்தார். 1945இல், மேற்குறிப்பிட்ட மூன்று பாடசாலைகளும் பிரித்தானிய அரசால் பொறுப்பேற்கப்பட்டு, சைவப்பள்ளி, "இளமுறைஞர் பாடசாலை" (யூனியர் ஸ்கூல்) என்ற பெயரில், மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அமைந்திருந்த வளாகத்துக்கு இடமாற்றப்பட்டது. இடவசதி கருதி, ஆண்கள் பாடசாலை, சைவப்பள்ளியின் வளாகத்துக்கும், பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலையின் இடத்துக்கும் இடமாற்றப்பட்டன. ஆண்டு ஒன்றிலிருந்து, ஐந்து வரை ஆண் - பெண் பாடசாலைகளில் கற்பதும், விரும்பினால், யூனியர் ஸ்கூலில் எட்டாமாண்டு வரை மேற்படிப்பைத் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.[1] இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின், யூனியர் ஸ்கூல் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றப்பட்டு, 1958இல், இன்றைய அதன் அமைவிடத்துக்கு இடமாற்றப்பட்டது.

அதிபர்கள் தொகு

  • திரு.ஏ.நடராசா (1944–1945) சைவப்பள்ளி தாபகர்
  • திரு.செபமாலை (1945–1953) யூனியர் ஸ்கூல் முதலாவது அதிபர்
  • திரு.கே.சோமசுந்தரம் (1953–1961) [5]
  • திரு.எஸ்.எம்.லீனா (1961–1969)
  • திரு.எம்.பரராசசிங்கம் (1969–1970)
  • திரு.எம்.சச்சிதானந்தசிவம் (1970–1984)
  • திரு.பி.சதாசிவம் (1984–1988)
  • திரு.ஜே.ஜெயராஜசிங்கம் (1988–1991)
  • திரு.ஏ.கணேசமூர்த்தி (1991)
  • திரு.ஆர்.நேசராசா (1991–1994)
  • திரு.ஏ.கணேசமூர்த்தி (1994–1996)
  • திரு.பி.சிவப்பிரகாசம் (1996–1997)
  • திரு.எஸ்.தவராசா (1997)
  • திரு.ஏ.கணேசமூர்த்தி (1998–2000)
  • திரு.வ.ஜயந்தன்(2000–2009)
  • திரு.த.புஷ்பராஜா (2009)
  • திரு.சோ.இரவீந்திரன் (2010–2016)
  • திரு.வ.ஜயந்தன்(2016– இன்றுவரை)

மேலும் பார்க்க தொகு

உசாத்துணைகள் தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-27. பார்க்கப்பட்ட நாள் 2015-08-17.
  2. தமிழ்மிரர் செய்திகள், (2016 நவம்பர் 03), "தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்ந்தது" பார்த்த நாள்: 23 பிப்ரவரி 2017
  3. "நியூஸ்ரிஎன்என் செய்தி, (2016 நவம்பர் 03), "இலங்கையின் 353வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம் தரமுயர்வு" பார்த்த நாள்: 23 பிப்ரவரி 2017". Archived from the original on 2017-02-23. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
  4. நூற்றாண்டு விழா மலர் (2011), திருக்கோவில் மெதடிஸ்த தேவாலயம், பப.26,27
  5. யூனியர் ஸ்கூலானது 1958இல் மகாவித்தியாலயமாகப் பெயர் மாற்றப்பட்டது. (பொன்விழா மலர் (2008) தம்பிலுவில் ம.ம.வி,ப.17)

வெளி இணைப்புகள் தொகு