தம்ரா
தம்ரா (Tamra) (அரபு மொழியில்: طمرة, இப்ரு மொழியில்: טַמְרָה or תַמְרָה) இசுரேல் நாட்டின் வடக்கு மாவட்டத்தில் உள்ள அரபு நகரமாகும். லோவர் கலில்லீயில் உள்ள செஃபா அமுர் நகருக்கு வடக்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் அக்கோவில் இருந்து தோராயமாக கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்நகரம் காணப்படுகிறது.
தம்ரா
Tamra
| |
---|---|
எபிரேயம் transcription(s) | |
• ISO 259 | Ṭámra, Támra |
Grid position | 169/250 PAL |
மாவட்டம் | வட மாவட்டம் |
அரசு | |
• வகை | நகர் (1996 முதல்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 29,259 dunams (29.259 km2 or 11.297 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 27,300 |
பெயரின் கருத்து | from make a pit for storing corn[1] |
வரலாறு
தொகுதொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளில், இரும்புக்காலம் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு காலம், முந்தைய எல்லெனிச்டிக் காலம், உரோமைப் பேரரசு காலம் மற்றும் பைசாந்தியப் பேரரசு காலம் மற்றும் உமையா கலீபகம் போன்ற பண்டைய காலங்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[2][3]
மக்கள்தொகை நிறைந்த பைசாந்தியப் பேரரசு மற்றும் பண்டைய இசுலாமியப் பேரரசுகளின் பல கட்டிடங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.[4]
1253 இல் குருசடார் சகாப்த காலத்தில் கேசரேய மன்னன் சான் அலிமான், தம்ரா உட்பட பல கிராமங்களை ஆசுபிடாலெர்சுகளுக்கு விற்பனை செய்துள்ளார்.[5] இவை குருசடார் பிராந்தியத்தின் ஒரு பகுதி என்று 1283 ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. குருசடார்களுக்கும் மம்லுக் வம்ச சுல்தான் குவாலாவுனுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இவை தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன.[6]
ஒட்டோமான் சகாப்தம்
தொகுதம்ரா மற்ற பாலத்தீனக் கிராமங்கள் போல 1517 இல் ஓட்டோமான் பேரரசுடன் இணைக்கப்பட்டது. 1596 கணக்கெடுப்பில் இக்கிராமம் சாஃபத் நகரம் அமைந்துள்ள லிவா மாவட்டத்தில் நாகியா நிர்வாகப் பிரிவில் இடம்பெற்றிருந்தது. இக்கிராமத்தின் மக்கள் தொகை மொத்தம் 22 இசுலாமியக் குடும்பங்கள் ஆகும். கோதுமை, பார்லி, பழ மரங்கள், பருத்தி, அவ்வப்போது கொஞ்சம் வருவாய், தேன் கூடுகள் மற்றும் குளிர்கால மேய்ச்சல் நிலங்கள் முதலியவற்றை அவர்கள் வரியாகச் செலுத்தினர்.[7][8] 1799 இல் பியர் யாகோட்டின் தயாரித்த வரைபடத்தில் இக்கிராமம் தம்ராட் எனப் பெயரிடப்பட்டிருந்தது[9].
1859 ஆம் ஆண்டில், பிரிட்டனின் கொன்சல் ரோகர்சு இக்கிராமத்தின் மக்கள் தொகையை 1,200 என மதிப்பிட்டார். அனைவரும் இசுலாமியர்கள் என்றும் விளைநிலப்பரப்பு சுமார் 80 ஏக்கர்கள் என்றும் குறிப்பிட்டார்.[10] அதேசமயத்தில் விக்டர் குரின் இக்கிராமத்தின் மக்கள் தொகையாக குடியிருப்பவர்கள் 800 நபர்கள் என்றும் அனைவரும் இசுலாமியர்கள் என்றும் 1875 இல் கண்டறிந்ததாகவும் குறிப்பிடுகிறார்.[11]
பாலத்தீனிய புத்தாய்வு நிதியத்தின், மேற்கத்திய பாலத்தீன நில அளவைத் துறை 1881 ஆம் ஆண்டில் தம்ரா தொடர்பான செய்திகளைத் தருகிறது. தம்ரா ஒரு பெரிய கிராமம். ஒரு சிறிய கிழக்கு திசையில் ஒரு மசூதியும் வடக்கில் ஒரு கிணறும் இருந்தது. வீடுகளின் மேற்குப் பகுதியில் ஒரு பாறைகளால் கட்டப்பட்ட சமாதி இருந்தது. கிராமத்தின் தெற்குப் பகுதியில் ஆலிவ் மரங்கள் நிறைந்த ஒரு சோலை அல் ருவாய் வரை பரந்து காணப்பட்டது."[10]
பிரித்தானிய ஆணை சகாப்தம்
தொகு1922 ஆம் ஆண்டின் பாலத்தீன மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தம்ராவின் மக்கள்தொகை 1111 ஆகும். அனைவரும் இசுலாமியர்கள்[12] . 1931 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இத்தொகை 1258 ஆக உயர்ந்தது. 282 வீடுகளில் வாழ்ந்த அனைவரும் இசுலாமியர்கள்.[13]
1945 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இத்தொகை 1830 ஆக உயர்ந்தது. அனைவரும் அராபியர்கள் ஆவர். இக்கிராமத்தின் ஆட்சி எல்லை மொத்தமாக 30,559 துணாம்கள் நிலப்பகுதி ஆகும்[14]. 1564 துணாம் நிலம் பயிர் செய்யத் தகுதியுள்ள பாசனவசதியுள்ள நிலமாகும். 14434[15] துணாம் நிலப்பகுதியில் தானிய வகைகளும் 206 துணாம் நிலப்பகுதி நகரமாக கட்டப்பட்டும் இருந்தது என்றும் பிரித்தானியப் பதிவுகள் தெரிவிக்கின்றன.[16]
மேற்கோள்கள்
தொகு- ↑ Palmer, 1881, p. 117
- ↑ Porat, 2005, Tamra
- ↑ Mokary, 2010, Tamra, Final report
- ↑ Abu Fana, 2009, Tamra
- ↑ Delaville Le Roulx, 1883, p. 184; cited in Clermont-Ganneau, 1888, pp. 309 -310; cited in Röhricht, 1893, RRH, p. 319, No. 1210
- ↑ al-Qalqashandi version of the hudna, referred in Barag, 1979, p. 204, no. 20
- ↑ Hütteroth and Abdulfattah, 1977, p. 192
- ↑ Note that Rhode, 1979, p. 6 writes that the Safad register that Hütteroth and Abdulfattah studied was not from 1595/6, but from 1548/9
- ↑ Karmon, 1960, p. 162 பரணிடப்பட்டது 2019-12-22 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 10.0 10.1 Conder and Kitchener, 1881, SWP I, p. 273
- ↑ Guérin, 1880, pp. 421-422
- ↑ Barron, 1923, Table XI, Sub-district of Acre, p. 37
- ↑ Mills, 1932, p. 103
- ↑ Government of Palestine, Department of Statistics. Village Statistics, April, 1945. Quoted in Hadawi, 1970, p. 41
- ↑ Government of Palestine, Department of Statistics. Village Statistics, April, 1945. Quoted in Hadawi, 1970, p. 81
- ↑ Government of Palestine, Department of Statistics. Village Statistics, April, 1945. Quoted in Hadawi, 1970, p. 131
புற இணைப்புகள்
தொகு- Welcome To Tamra
- Survey of Western Palestine, Map 5: IAA, Wikimedia commons
- Susan Nathan: An Israeli Jew in a Muslim town பரணிடப்பட்டது 2006-12-23 at the வந்தவழி இயந்திரம்
- Municipality of Tamra (Israel) Flags of the World
- The Condition of the Palestinian Minority Exposed By New Book Reilly Vinall
- Map 1946