தயாள் பத்மநாபன்

இந்தியத் திரைப்பட இயக்குநர்

தயாள் பத்மநாபன் (Dayal Padmanabhan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக கன்னடத் திரைப்படங்களில் பணிபுரிகிறார். இவர் இரண்டு முறை கருநாடக அரசு விருதைப் பெற்றவர். ஒரு முறை இந்தியன் பனோரமா, ஐ.எஃப். எஃப். ஐ( கோல்டன் ஜூப்ளே பதிப்பு)நுழைந்தார்.

தயாள் பத்மநாபன்
பிறப்பு14 சூன் 1970 (1970-06-14) (அகவை 54)
விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000 முதல் தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
மீனா தயாள்

இவரது படங்களில் பா பாரோ ரசிகா (2004), யஷ்வந்த் (2005), சர்க்கஸ் (2009), ஹக்கட கோனே (2014), ஆக்டர் (2015), ஆ காராள ராத்திரி (2018), ரங்கநாயகி (2019) ஆகியன அடங்கும். இயக்குநராக இவரது முதல் படம் ஓகே சார் ஓகே. இவர் காலிபட்டா, படத்தில் நடித்தார் அதில் இவர் ஏற்றிருந்த டிராகுலா கதாபாத்திரம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.[1] இவரது திரைப்படமான ஹக்கடா கோனே மற்றும் ஆ கரால ராத்திரி ஆகியவை விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றன, மேலும் 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் முறையே சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படம் என்ற பிரிவின் கீழ் அந்தப் படங்களுக்காக கருநாடக அரசின் விருதுகளைப் பெற்றார்.[2] தயாள்பத்மநாபன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான கன்னட பிக் பாஸ் பருவம் 5 இல் கலந்துகொண்டார். அதில் அவரது 21 வது நாளில் வெளியேற்றப்பட்டார்.[3][4][5] விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்படமான "குரங்கு பொம்மை"யை கன்னடத்தில் "லூஸ் மட" யோகி நடிப்பில் "ஒம்பத்தனே திக்கு" என்ற பெயரில் மறுஆக்கம் செய்தார்.[6] 2020 ஆம் ஆண்டில், தயாள், தான் கன்னடத்தில் இயக்கி வெற்றி பெற்ற ஆ கரால ராத்திரி படத்தின் மறுஆக்கங்களான "அனகனக ஓ அதீதி" மற்றும் "கொன்றால் பாவம்" மூலம் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படத் துறைகளில் நுழைந்தார்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு தலைப்பு எழுத்தாளராக இயக்குநராக தயாரிப்பாளராக மொழி குறிப்புகள்
2001 கட்டிமேளா ஆம் கன்னடம்
2003 ஹுடுகிகாகி ஆம் கன்னடம்
2004 ஓம் கணேஷ் ஆம் கன்னடம்
2004 ஓக்கே சார் ஓக்கே ஆம் கன்னடம்
2004 பா பாரோ ரசிகா ஆம் ஆம் கன்னடம் தயாள் என்று குறிப்பிடப்பட்டது
2005 யஷ்வந்த் ஆம் ஆம் கன்னடம் தயாள் என்று குறிப்பிடப்பட்டது
2005 மசாலா ஆம் ஆம் கன்னடம்
2005 சக சகி ஆம் கன்னடம்
2008 காலிபட்டா நிர்வாக தயாரிப்பாளர் கன்னடம் யோகராஜ் பட் இயக்கம்
2009 சர்க்கஸ் ஆம் ஆம் கன்னடம்
2010 ஸ்ரீ ஹரிகதே ஆம் ஆம் கன்னடம்
2011 யோகராஜ் பட் ஆம் ஆம் கன்னடம் சிறந்த திரைக்கதைக்கான டைம்ஸ் ஆஃப் இந்தியா திரைப்பட விருதுகள் - கன்னடம், பெற்றது
2014 கர்ஷனே திரைக்கதை ஆம் கன்னடம்
2014 ஹக்கடா கோன் ஆம் ஆம் ஆம் கன்னடம்
2016 ஆக்டர் ஆம் ஆம் கன்னடம்
2017 டாஸ் ஆம் ஆம் கன்னடம்
2017 சத்திய ஹரிச்சந்திரா ஆம் கன்னடம் சிங் விசஸ் கவுர் படத்தின் மறுஆக்கம்
2018 ஆ கரால ராத்திரி ஆம் ஆம் கன்னடம் பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த இயக்குனருக்கான சைமா விருது - கன்னடம்
2018 புட்டா 109 ஆம் ஆம் கன்னடம்
2019 திரயம்பகம் ஆம் ஆம் கன்னடம்
2019 ரங்கநாயகி வால்யும் 1<span typeof="mw:DisplaySpace" id="mwAVM"> </span>: வெர்ஜினிட்டி ஆம் ஆம் கன்னடம்
2020 அனகனக ஓ அதிதி ஆம் ஆம் தெலுங்கு 'ஆ கரால ராத்திரி' படத்தின் மறுஆக்கம்

தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகம்
2022 ஒம்பத்தனே திக்கு ஆம் ஆம் ஆம் Kannada குரங்கு பொம்மை பட்டத்தின் மறுஆக்கம்
2023 கொன்றால் பாவம் ஆம் ஆம் Co-producer Tamil 'ஆ கரால ராத்திரி' படத்தின் மறுஆக்கம்

Debut in தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகம்
மாருதி நகர் போலிஸ் ஸ்டேசன் ஆம் ஆம் ஆம் தமிழ்

விருதுகள்

தொகு
ஆண்டு திரைப்படம் விருது வகை முடிவு மேற்கோள்.
2011 யோகராஜ் பட் டைம்ஸ் ஆப் இந்தியா திரைப்பட விருதுகள் சிறந்த திரைக்கதை-கன்னடம் வெற்றி
2014 ஹக்கடா கோன் கர்நாடக அரசு திரைப்பட விருதுகள் சிறந்த இயக்குநருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது (ம) சிறந்த படம் வெற்றி [7]
2018 ஆ காராள ராத்திரி 2018 கர்நாடக அரசு திரைப்பட விருதுகள் முதல் சிறந்த படம் வெற்றி [8]
சிறந்த இயக்குநர் வெற்றி
8வது சைமா விருதுகள் சிறந்த இயக்குநர் பரிந்துரை [9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Consumer reviews on Movies, Cars, Bikes, Mobile Phones, Music, Books, Airlines, Restaurants, Hotels & more - MouthShut.com". www.mouthshut.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.
  2. "The tricks of survival: Kannada director Dayal on straddling commercial and independent cinema". 9 February 2017. Archived from the original on 12 February 2017.
  3. "Dayal to Direct Sharan - Exclusive - chitraloka.com | Kannada Movie News, Reviews | Image". www.chitraloka.com. Archived from the original on 9 August 2016. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  4. "Dayal Padmanabhan Makes an Intelligent Move". Archived from the original on 22 January 2018.
  5. Upadhyaya, Prakash (2018-07-11). "Aa Karaala Ratri movie review: Celebs, critics give a thumbs-up for Dayal Padmanabhan's creation". International Business Times, India Edition (in english). பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. no-author (2019-09-13). "ombattane dikku: ಕನ್ನಡದ ಒಂಭತ್ತನೇ ದಿಕ್ಕಿಗೆ ಬಂದ ನಾನ್‌ ಕಡವಳ್‌ ಖ್ಯಾತಿಯ ನಟ ಆರ್ಯ - naan kadavul fame arya claps kannada movie ombattane dikku". Vijaya Karnataka (in கன்னடம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-10. {{cite web}}: |last= has generic name (help)
  7. Khajane, Muralidhara (13 February 2016). "Film awards: a balance between main and independent film-making streams". The Hindu.
  8. "KARNATAKA STATE FILM AWARDS 2018: RAGHAVENDRA RAJKUMAR AND MEGHANA RAJ BAG TOP HONOURS; CHECK OUT ALL WINNERS". Bangalore Mirror. பார்க்கப்பட்ட நாள் 30 June 2020.
  9. "SIIMA Awards 2019 full winners list". Times Now. 17 August 2019. பார்க்கப்பட்ட நாள் 19 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாள்_பத்மநாபன்&oldid=4167693" இலிருந்து மீள்விக்கப்பட்டது