கொன்றால் பாவம்

2023 தமிழ்த் திரைப்படம்

 

கொன்றால் பாவம்
சுவரிதழ்
இயக்கம்தயாள் பத்மநாபன்
தயாரிப்புபிரதாப் கிருஷ்ணா
மனோஜ் குமார்
கதைஜான் மகேந்திரன் (உரையாடல்)
திரைக்கதைதயாள் பத்மநாபன்
இசைசாம் சி. எஸ்.
நடிப்பு
ஒளிப்பதிவுசெழியன்
படத்தொகுப்புபிரீத்தி மோகன் பாபு
கலையகம்ஐன்ஃபாச் ஸ்டுடியோஸ்
வெளியீடுமார்ச்சு 10, 2023 (2023-03-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கொன்றால் பாவம் (Kondraal Paavam) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் குற்றவியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். தயாள் பத்மநாபன் எழுதி இயக்கிய இப்படத்தை ஐன்ஃபாக் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் ஆகியோர் தயாரித்தனர். இதில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் இப்படம் 10 மார்ச் 2023 அன்று வெளியானது. இப்படம் இப்பட இயக்குனரின் சொந்த கன்னட படமான ஆ கராள ராத்திரி (2018) படத்தின் மறுஆக்கமாகும். அது ரூபர்ட் புரூக்கின் ஆங்கில நாடகமான லிதுவேனியாவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மோகன் ஹப்புவின் கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.[1][2]

தமிழ்நாட்டின் உட்புறத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், வயதான இணையரான கருப்புசாமி, வள்ளியம்மாள், அவர்களது முதிர்கன்னி மகளான மல்லிகா ஆகியோரைக் கொண்ட ஒரு ஏழைக் குடும்பம் வாழ்கிறது. ஒரு நாள் கோடாங்கி அவர்களுக்கு வரும் அதிர்ஷ்டம் குறித்து குடுகுடுப்பை அடித்து குறிசொல்கிறான். ஒரே இரவில் அவர்களின் அதிர்ஷ்டத்தால் வாழ்வு வியத்தகு முறையில் மாறும் என்று கணித்துக் கூறுகிறான். மேலும் அதை சிறந்ததாகவோ அல்லது மோசமானதாகவோ மாற்றிக் கொள்வது அவர்களுடைய கையில் உள்ளது என்கிறான். அதே நாளில், அர்ஜூணன் என்ற அந்நியன் இரவு தங்க வீட்டில் இடம் கேட்கிறான். முதலில் அவர்கள் தயக்கம் காட்டினாலும், பின்னர் அவனை வீட்டிற்குள் அழைத்துக்கொள்கின்றனர்.

அர்ஜூணன் அந்தக் குடும்பத்தின் பொருளாதார சிக்கல்கள் குறித்து தெரிந்து கொள்கிறான். அவன் பணமும் நகைகளும் நிறைந்த தன் பெட்டியை அவர்களுக்குக் காட்டுகிறான். கடினமாக உழைத்தனால் தனது வாழ்நிலை மாறியது என்று கூறுகிறான். இதுபோல அவர்களாலும் முடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறான். அர்ஜூணனின் அழகு, அவனிடமுள்ள பணம் ஆகியவற்றைக் கண்டு அவனிடம் மல்லிகா மயங்குகிறாள். அவனைக் கவர்ந்திழுக்க முயன்று அவனால் கட்டிக்கப்படுறாள். பின்னர் மல்லிகா தன் பெற்றோரிடம் அர்ஜூணனைக் கொன்று, அவனிடம் உள்ள தங்கம், பணத்தைக் கவர்ந்து தங்கள் பொருளாதார நிலையை மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்கிறாள். பெற்றோர்கள் தயங்கினாலும், பின்னர் அவர்கள் அவளின் திட்டத்துக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

அந்தக் குடும்பத்தினர் அர்ஜூணைக் கொன்றார்களா அவர்களின் குடும்பச் சிக்கல்கள் தீர்ந்தனவா என்பதே கதையின் முடிவாகும்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இப்படத்தின் படப்பிடிப்பு 28 அக்டோபர் 2022 அன்று தொடங்கியது.[3][4]

வரவேற்பு

தொகு

இப்படம் 2023 மார்ச் 10 அன்று தமிழகம் முழுவதும் வெளியானது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் லோகேஷ் பாலச்சந்திரன் படத்திற்கு 5 நட்சத்திரங்களில் 3 நட்சத்திரங்களைக் கொடுத்து, "கொன்றால் பாவம் படத்தில் குறைபாடுகள் இருந்தாலும், தீவிரமான பாத்திரங்களும், திரைக்கதையும் பார்க்கத் தகுந்ததாக மாற்றுகின்றன" என்று குறிப்பிட்டார். தினத்தந்தி விமர்சகர் கலவையான விமர்சனம் வழங்கினார், "சலிப்பூட்டலற்ற குற்றவியல் மற்றும் பரபரப்பூட்டும் கதையை இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியிருப்பது சிறப்பு. உள்ளுணர்சிப்பாங்கு, காதல், துரோகம் என அனைத்து உணர்வுகளையும் சமமாக கலந்து ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்."[5] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசின் சந்தினி ஆர் "ஒரு பயனுள்ள சஸ்பென்ஸ் நாடகம் அழுத்தமான நிகழ்வுகளைக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டார். மேலும் 5 நட்சத்திரங்களில் 3 நட்சத்திரங்களை வழங்கினார்.[6]

ஜீ நியூசின் ஒரு விமர்சகர் "ஒவ்வொரு கதாபாத்திரமும் கொன்றால் பாவம் திரைப்படத்தை தாங்கி நிற்கிறது. நடிகர்களின் நடிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது" என்று குறிப்பிட்டார்.[7] தினமலரின் ஒரு விமர்சகர் 5 புள்ளிகளுக்கு 3 புள்ளிகளைக் கொடுத்தார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Aa Karala Ratri: What happened when Bhagavan proposed the film to legendary filmmaker Rajkumar 40 years ago". Bangalore Mirror. 17 July 2018. Archived from the original on 30 March 2019. பார்க்கப்பட்ட நாள் 17 November 2020.
  2. "I look at this remake as an original film". The New Indian Express. Archived from the original on 11 March 2023. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
  3. "Dayal Padmanabhan to remake Aa Karaala Ratri in Tamil". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 11 March 2023. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
  4. "வரலட்சுமி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது". maalaimalar.com. 28 October 2022. Archived from the original on 11 March 2023. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
  5. "கொன்றால் பாவம்: சினிமா விமர்சனம்". தினத்தந்தி. 10 March 2023. Archived from the original on 10 March 2023. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
  6. "'Kondraal Paavam' movie review: An effective suspense drama shouldered by compelling performances". The New Indian Express. Archived from the original on 11 March 2023. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
  7. "கொன்றால் பாவம் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!". Zee Hindustan Tamil. 8 March 2023. Archived from the original on 11 March 2023. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
  8. "கொன்றால் பாவம் - விமர்சனம்". தினமலர். Archived from the original on 8 August 2023. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்றால்_பாவம்&oldid=4146466" இலிருந்து மீள்விக்கப்பட்டது