சந்தோஷ் பிரதாப்
சந்தோஷ் பிரதாப் (Santhosh Prathap) என்பவர் தமிழ் திரையுலகில் பணிபுரியும் இந்திய நடிகர் ஆவார். இவர் கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டில், இவர் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமலி (சீசன் 3) இல் போட்டியாளராக கலந்தொகொண்டார்.[1]
சந்தோஷ் பிரதாப் | |
---|---|
பிறப்பு | 2 சூன் 1987 |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போது |
தொழில்
தொகுசந்தோஷ் ரா. பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) படத்தின் வழியாக நடிகராக அறிமுகமானார். அது திரையுலகில் ஒரு அடையாளத்தை பெற விரும்பி போராடும் இயக்குநரை சித்தரித்து நடித்தார். படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு, இவர் மீண்டும் தயம் (2017) படம் வழியாக வந்தார். அது முழுக்க முழுக்க ஒரே அறையில் எடுக்கப்பட்ட பரபரப்பூட்டும் திரைப்படமாகும்.[2] அதன் பிறகு இவர் முதன்முதலில் மிஸ்டர். சந்திரமௌலி படத்தில் எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்தார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | தலைப்பு | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2014 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | தமிழ் | பரிந்துரை—சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள் |
2017 | தாயம் | அஸ்வின் அகஸ்டின் | |
பயமா இருக்கு | ஜெய் | ||
2018 | மிஸ்டர். சந்திரமௌலி | விநாயக் கனகசபை | |
2019 | பொது நலன் கருதி | நெப்போலியன் | |
தேவ் | ஹரிஷ் | ||
நான் அவளை சந்தித்த போது | மூர்த்தி | ||
பஞ்சராக்ஷரம் | துஷ்யந்த் | ||
2020 | ஓ மை கடவுளே | கிருஷ்ணா | |
இரும்பு மனிதன் | சுந்தரம் | ||
என் பெயர் ஆனந்தன் | சத்யா | ||
2021 | சார்பட்டா பரம்பரை | ராமன் | |
2022 | கதிர் | சாவித்ரியின் கணவர் | |
2022 | ஓரி தேவுடா | கிருஷ்ணா | தெலுங்குப் படம் |
2023 | அன்புள்ள டெத் | டெத் | |
கொன்றால் பாவம் | அர்ஜுனன் | ||
பத்து தல | முதல்வர் அருண்மொழி | ||
மருதி நகர் காவல் நிலையம் | பாலா | ||
கழுவேர்த்தி மூர்க்கன் | பூமிநாதன் | ||
தி ரோட் | ஆனந்த் | ||
2024 | அரண்மனை 4 | சந்தோஷ் | |
ஈகை | வி. அருண் | படப்பிடிப்பு[3] |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | தலைப்பு | பங்கு | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|---|
2019 | போலீஸ் டைரி 2.0 | அதிகாரி கதிர் வேல் | ஜீ5 | |
2021 | குருதிக்களம் | விஜய் | எம்எக்ஸ் பிளேயர் | |
2022 | குக்கு வித் கோமளி-பருவம் 3 | போட்டியாளர் | விஜய் தொலைக்காட்சி | இறுதிப்போட்டி |
ஆனந்தம் ஆரம்பம் | ராம் சரண் | ஹாட் ஸ்டார் | மைக்ரோ தொடர் | |
கனா காணும் காலங்கள் பருவம் 2 | 'ராக்ஸ்டார்' அசோக் | சிறப்புத் தோற்றம் | ||
ஃபால் | டேனியல் | [4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cook with Comali 3 Contestants Names with Photos & Comali List". www.newsintv.com. Newsintv. 23 January 2022. Archived from the original on 15 February 2022. பார்க்கப்பட்ட நாள் 15 February 2022.
- ↑ Purushothaman, Kirubhakar (9 September 2016). "Dhayam – the first Tamil film to be shot in one room". Deccan Chronicle. Archived from the original on 14 July 2021. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.
- ↑ "Eegai - Santhosh Prathap comes on board Anjali's 50th film; check out his character poster". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-17.
- ↑ "First look of Siddharth Ramaswamy's upcoming web series 'Fall' released" (in ஆங்கிலம்). www.newindianexpress.com. Archived from the original on 3 December 2022.