தயோபாசுபோரைல் அயோடைடு
வேதிச் சேர்மம்
தயோபாசுபோரைல் அயோடைடு (Thiophosphoryl iodide) என்பது PSI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தயோபாசுபோரைல் மூவயோடைடு
பாசுபரசு தயோ அயோடைடு பாசுபோரோதையாயிக் மூவயோடைடு | |
இனங்காட்டிகள் | |
63972-04-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21517233 |
| |
பண்புகள் | |
PSBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 443.75 மோல்−1 |
தோற்றம் | செம்பழுப்பு திண்மம்[1] |
உருகுநிலை | 48 °C (118 °F; 321 K) |
கொதிநிலை | சிதைவடையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபாசுபரசு மூவயோடைடுடன் கார்பன் டைசல்பைடில் உள்ள கந்தகத்தை சேர்த்து 10-15 பாகை செல்சியசு வெப்பநிலையில் பல நாட்களுக்கு இருளில் வைத்திருந்தால் தயோபாசுபோரைல் அயோடைடு உருவாகிறது.[1][2]
இலித்தியம் அயோடைடுடன் தயோபாசுபோரைல் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயோபாசுபோரைல் அயோடைடை தயாரிக்க எடுக்கப்பட்ட முயற்சியில் இதற்குப் பதிலாக PSBr2I மற்றும் PSBrI2 என்ற வாய்ப்பாடுகளைக் கொண்ட கலப்பு தயோபாசுபோரைல் ஆலைடுகள் உருவாகின.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 501–503. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Arthur D. F. Toy (1975). The Chemistry of Phosphorus. Permanon Texts in Inorganic Chemistry. Vol. 3. Permanon Press. p. 438. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483139593.
- ↑ Dillon, K. B.; Craveirinha Dillon, M. G.; Waddington, T. C. (1977). "The identification of some new thiophosphoryl compounds containing P–I bonds by means of 31P N.M.R. spectroscopy". Inorg. Nucl. Chem. Lett. 13 (8): 349–353. doi:10.1016/0020-1650(77)80109-8.