தரவுப் பாய்வு வரைபடம்
தரவுப் பாய்வு வரைபடம் (data-flow diagram) அல்லது தரவு போக்கு வரைபடம் (DFD) என்பது ஒரு செயல்முறை அல்லது ஒரு அமைப்பு (பொதுவாக ஒரு தகவல் அமைப்பு) மூலம் தரவு பாய்வதைக் குறிக்கும் ஒரு வழிமுறையாகும். தரவுப் பாய்வு வரைபடத் தகவல் அமைப்பு ஒவ்வொரு நிறுவனத்தின் வெளியீடுகள், உள்ளீடுகள், செயல்முறை பற்றிய தகவல்களை டி வழங்குகிறது. தரவுப் பாய்வு வரைபடத்தில் கட்டுப்பாட்டு ஓட்டம் இல்லை. முடிவெடுப்பு விதிகளும் கண்னிகளும் இல்லை. தரவுகளின் அடிப்படையிலான குறிப்பிட்ட செயல்பாடுகளை ஒரு பாய்வு விளக்கப்படம் வழியும் குறிப்பிடலாம். [2]
தரவுப் பாய்வு வரைபடங்களைக் காண்பிப்பதற்கு பல குறிப்புமுறைகள் உள்ளன. மேலே வழங்கப்பட்ட குறிப்புமுறை 1979 ஆம் ஆண்டில் தாம் திமார்கோவால் கட்டமைக்கப்பட்ட பகுப்பாய்வின் ஒரு பகுதியாக விவரிக்கப்பட்டது.
ஒவ்வொரு தரவு பாய்வுக்கும் குறைந்தது ஒரு இறுதிப் புள்ளியில் (வாயில் / இலக்கு) ஒரு செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஒரு செயல்முறையின் தூயயௌருவகிப்பை மற்றொரு தரவுப் பாய்வு வரைபடத்தில் செய்யலாம் , இது, இந்தச் செயல்முறையை துணை செயல்முறைகளாக பிரிக்கிறது.
தரவுப் பாய்வு வரைபடம் என்பது கட்டமைக்கப்பட்ட பகுப்பாய்வு, தரவு படிமத்தின் ஒரு பகுதியாகும். கட்டமைக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுப் படிமமாக்கத்தைப் பயன்படுத்தும் போது செயல்பாட்டு வரைபடம் பொதுவாக தரவுப் பாய்வு வரைபடத்தின் பங்கை எடுத்துக் கொள்கிறது. செயல்பாட்டு வரைபடம் தரவுப் பாய்வுத் திட்டத்தின் ஒரு சிறப்பு வடிவக் களம் சார்ந்த தரவுப் பாய்வுத் திட்டமாகும்.
தரவுப் பாய்வு வரைபடங்களை தலைகீழ் பெட்ரி வலைகளாகவும் கருதலாம் , ஏனெனில் அத்தகைய வலையமைப்புகளில் உள்ள இடங்கள் தரவு நினைவுகளின் சொற்பொருள்களுடன் ஒத்திருக்கின்றன. பெட்ரி வலைகள், இதேபோல பெட்ரி வலைகளின் மாற்றங்களின் சொற்பொருள்கள் தரவுப் பாய்வுகள், தரவுப் பாய்வு வரைபடங்களின் செயல்பாடுகள் சமமானதாகக் கருதப்பட வேண்டும்.
வரலாறு.
தொகுந்தர்வுப் பாய்வுக் குறிப்புமுறை முதலில் நிறுவனச்செயல்பாட்டு ஆராய்ச்சியில் பணிப்பாய்வுப் படிமமாகப் பயன்படுத்தும் வரைவியல் கோட்பாட்டை ஈர்க்கிறது. இது 1970 களின் இறுதியில் கட்டமைக்கப்பட்ட பகுப்பாய்வு, வடிவமைப்பு நுட்ப முறைகளில் பயன்படுத்தும் செயல்பாட்டு வரைபடத்திலிருந்து உருவானதாகும். செயல்பாட்டு வரைபடம் கட்டமைக்கப்பட்ட பகுப்பாய்வு, வடிவமைப்பு நுட்பம், தரவுப் பாய்வு வரைபடம் ஆகியவை எட்வர்டு யுவர்டன், இலாரி கான்சுட்டான்டைன் தாம் திமார்கோ, கிறிசு கேன், திரிசு சார்சன் ஆகியோரால் பெயர்பெறலாயின.[3]
தரவுப் பாய்வு வரைபடங்கள் மென்பொருள் அமைப்பு செயல்முறைகளில் ஈடுபடும் முதன்மை படிநிலைகளையும் தரவையும் காட்சிப்படுத்துவதற்கான சிறந்த வழியாக மாறின. இவை பொதுவாக ஒரு கணினி அமைப்பில் தரவுப் பாய்வைக் காட்டப் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் இவை கோட்பாட்டில் வணிக செயல்முறைப் படிமத்தைப் பயன்படுத்தலாம். வணிக செயல்முறை படிமம் முதன்மைத் தரவுப் பாய்வுகளை ஆவணப்படுத்தவோ அல்லது தரவுப் பாய்வின் அடிப்படையில் ஒரு புதிய உயர் மட்ட வடிவமைப்பை ஆராயவும் இவை பயனுள்ளனவாக இருந்தன.[4]
தரவுப் பாய்வு வரைபடக் கூறுகள்
தொகுதரவுப் பாய்வு வரைபடம் என்பது கிடங்குகள், முனையங்கள் பாயும் செயல்முறைகளைக் கொண்டுள்ளது. இந்த இத்தரவுப் பாய்வு வரைபடக் கூறுகளைப் பார்க்க பல வழிகள் உள்ளன.[5]
செயல்முறை
தொகுசெயல்முறை (சார்பு, உருமாற்றம்) என்பது உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் அமைப்பின் ஒரு பகுதியாகும். ஒரு செயல்முறையின் குறியீடு ஒரு வட்டமாகும் , ஒரு செவ்வகம் அல்லது வட்டமான மூலைகளுடன் கூடிய செவ்வகம் (குறியீட்டின் வகையின்படி). இந்தச் செயல்முறை ஒரு சொல் அல்லது ஒரு குறுந்தொடரில் அல்லது அதன் சாரத்தை தெளிவாக வெளிப்படுத்தும் ஒரு சொற்றொடரில் பெயரிடப்பட்டுள்ளது.[3]
தரவுப் பாய்வு
தொகுதரவுப் பாய்வுப் என்பது தகவல் பரிமாற்றத்தைக் காட்டுகிறது (சில நேரங்களில் அமைப்பின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கான பொருள் பரிமாற்றத்தையும் காட்டுகிறது. பாய்வின் குறியீடு அம்பு. எந்த தகவல் (அல்லது எந்த பொருள் நகர்த்தப்படுகிறது என்பதை தீர்மானிக்கும் பெயரை பாய்வு கொண்டிருக்க வேண்டும். இந்தப் பாய்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் வழி என்ன தகவல் மாற்றப்படுகிறது என்பது தெளிவாக இருக்கும் இடத்தில் பாய்வுகள் விதிவிலக்குகள் ஆகும். பொருள் மாற்றங்கள் வெறும் தகவலறிந்த அமைப்புகளில் படிமமாக உள்ளன. பாய்வு ஒரு வகை தகவலை மட்டுமே அனுப்ப வேண்டும் (பொருள். அம்பு பாய்வுத் திசையைக் காட்டுகிறது (தகவல் / நிறுவனத்திலிருந்து தருக்கவியலாகச் சார்ந்திருந்தால் அது இரு திசையிலும் அமையலாம். எ. கா.: கேள்வி மற்றும் பதில்). பாய்வுகள் கிடங்குகள், முனையங்கள், செயல்முறைகளை இணைக்கிறது.[3]
கிடங்கு
தொகுகிடங்கு (தரவுத்தேக்கம், தரவு தேக்கம், கோப்பு, தர்வைத்தளம்) பின்னர் பயன்படுத்திய தரவைத் திரட்டிவக் க பயன்படுகிறது. கிடங்கின் குறியீடு இரண்டு கிடைமட்ட கோடுகள் ஆகும் , மற்றொரு பார்வை தரவுப் பாய்வு வரைபடத்தின் குறிப்புமுரையில் காட்டப்பட்டுள்ளது. கிடங்கின் பெயர் ஒரு பன்மைப் பெயர்ச்சொல் (எ. கா. ஆணைகள். இது கிடங்கின் உள்ளீட்டு, வெளியீட்டு ஓடைகளிலிருந்து பெறப்படுகிறது. கிடங்கு ஒரு தரவுக் கோப்பாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் எடுத்துக்காட்டாக ஆவணங்களைக் கொண்ட ஒரு கோப்புறையாக இருக்கலாம். ஒரு தாக்கல் அமைச்சரவை அல்லது ஒளியியல் வட்டுகளின் தொகுப்பு. எனவே ஒரு தரவுப் பாய்வு வரைபடத்தில் கிடங்கைப் பார்ப்பது செயல்படுத்தலில் இருந்து தற்சார்பாக உள்ளது. கிடங்கிலிருந்து வரும் பாய்வு பொதுவாக கிடங்கில் வைக்கப்பட்டுள்ள தரவைப் படிப்பதைக் குறிக்கிறது. கிடங்கிற்குச் செல்லும் பாய்வு பொதுவாக தரவு உள்ளீட்டை அல்லது புதுப்பிப்பை வெளிப்படுத்துகிறது (சில நேரங்களில் இது தரவை நீக்குகிறது). கிடங்கு இரண்டு இணையான கோடுகளால் குறிக்கப்படுகிறது , அவற்றுக்கிடையே நினைவகப் பெயர் அமைந்துள்ளது (இதை ஒரு யு. எம். எல் இடையக முனைய படிமமாகக் கொள்ளலாம்).[3]
முனையம்
தொகுமுனையம் என்பது அமைப்புடன் தொடர்பு கொள்ளும், அதேவேளையில் அமைப்புக்கு வெளியே உள்ள வெளிப்புற நிறுவனம் ஆகும். எடுத்துகாட்டாக, பல்வேறு நிறுவனங்கள் (எ. கா. வங்கிக் குழுக்கள்) (வாடிக்கையாளர்கள்) அதிகாரிகள் (எ. கா. வரி அலுவலகம்) அல்லது ஒரு துறை ( அதே நிறுவன மனிதவளத் துறை) இது படிம அமைப்பு சாராமல் இருக்கலாம். முனைய்யம் என்பது மர்றொரு தொடர்பு கொள்ளும் அமைப்பாக இருக்கலாம்.[3]
தபாவ உருவாக்கும் விதிகள்
தொகுநிறுவனங்களின் பெயர்கள் மறுப்பின்றி புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். தபாவ என்பது கணினி பயனர்களுடனான நேர்காணல்களின் அடிப்படையில் ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒருபுறம் திட்ட ஒப்பந்ததாரருக்கும் மருபுறம் கணினி உருவாக்குநர்களுக்குமாக தீர்மானிக்கப்படுகிறது. எனவே நிறுவனத்தின் பெயர்கள் படிமக் களம் அல்லது பயில்நிலைப் பயனர்கள் அல்லது தொழில்முறையினர்களுக்கு ஏற்றவாறு தகவமைக்கப்பட வேண்டும். நிறுவனங்களின் பெயர்கள் பொதுவானதாகவும் தற்சார்புடனும் இருக்க வேண்டும் (எ. கா. செயல்பாட்டை மேற்கொள்ளும் குறிப்பிட்ட நபர்கள்) ஆனால் அந்த உருப்படியைத் தெளிவாக குறிப்பிட வேண்டும். எளிதாக படம்வரையவும் மேற்கோளாகச் சுட்டவும் செயல்முறைகள் எண்ணிடப்பட வேண்டும். எண்கள் தற்போக்கனவை. இருப்பினும் அனைத்து தபாவ நிலைகளிலும் தொடர் நிலைவைப் பேணுதல் தேவை (பார்க்க தபாவ படிநிலை. ஒரு தபாவவில் பேரளவு செயல்முறைகளின் எண்ணிக்கை 6 முதல் 9 வரை இருக்க பரிந்துரைக்கப்படுவதால் தபாவ தெளிவாக இருக்க வேண்டும். குறைந்தது தபாவவில் 3 செயல்முறைகள் இருக்கலாம்.[2][3] விதிவிலக்கானது சூழல் வரைபடம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு ஒரே செயல்முறை படிம அமைப்பு, அமைப்பு தொடர்பு கொள்ளும் அனைத்து முனையங்களையும் குறிக்கிறது.
தபாவ தொடர்நிலைவு
தொகுதபாவ அமைப்பு, உருப்படி உறவு வரைபடம், நிலைமாற்ற வரைபடம், தரவு அகராதி, செயல்முறைக் குறிப்பீட்டுப் படிமங்கள் ஆகிய பிற அமைப்புப் படிமங்களுடன் ஒத்துப்போக வேண்டும். ஒவ்வொரு செயல்முறையும் அதன் பெயருடன் உள்ளீடுகள், வெளியீடுகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பாய்வுக்கும் தனிப் பெயர் இருக்க வேண்டும் (விதிவிலக்காக பாய்வைப் பார்க்கவும். ஒவ்வொரு தரவுக் கிடங்கிலும் உள்ளீடும் வெளியீடும் அமைய வேண்டும். உள்ளீட்டு, வெளியீட்டுப் பாய்வுகள் ஒரு தபாவவில் காட்டப்பட வேண்டியதில்லை. ஆனால் அவை அதே அமைப்பை விவரிக்கும் மற்றொரு தபாவவில் இருக்க வேண்டும். ஒரு விதிவிலக்கு , கணினிக்கு வெளியே நிற்கும் கிடங்கு மட்டுமே (அமைப்பு தொடர்பு கொள்ளும் வெளிப்புறத் தேக்கம்).[3]
தபாவ படிநிலை
தொகுதபாவவை மேலும் வெளிப்படையானதாக மாற்ற (அதாவது அதிக செயல்முறைகள் இல்லை) பல மட்ட தபாவக்களை உருவாக்க முடியும். உயர் மட்டத்தில் இருக்கும் தபாவக்கள் குறைவான விரிவானவை (குறைந்த மட்டங்களில் மேலும் விரிவான தபாவவை ஒருங்கிணைக்கவும்). சூழல் சார்ந்த தபாவ படிநிலையில் மிக உயர்ந்தது (பார்க்க தபாவ உருவாக்கும் விதிகள்). சுழிய நிலை என்று அழைக்கப்படும் செயல்முறை தபாவ 0 எனும் எண்ணுடன் தொடங்குகிறது. அடுத்த நிலையில் முதல் நிலை என்று அழைக்கப்படும் தபாவ 1 எனும் எண் தொடர்கிறது. எடுத்துக்காட்டாகச் செயல்முறை 1 தபாவவின் முதல் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை 1.1 , 1.2, 1.3 என எண்ணிடப்பட்டுள்ளன. இதேபோல் இரண்டாவது நிலை (தபாவ 2) செயல்முறைகள் 2.1, ,2.2, 2.3 என எண்ணப்பட்டுள்ளன. நிலைகளின் எண்ணிக்கை படிம அமைப்பின் அளவைப் பொறுத்தது.தபாவ 0 செயல்முறைகள் ஒரே எண்ணிக்கையிலான பிரிப்பு நிலைகளைக் கொண்டிருக்காது. DFD 0 மிக முதன்மையான (ஒருங்கிணைந்த) கணினி செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. மிகக் குறைந்த மட்டத்தில் தோராயமாக ஒரு A4 பக்கத்திற்கான செயல்முறைக் குறிப்பீட்டை உருவாக்கக்கூடிய செயல்முறைகள் இருக்க வேண்டும். சிறு குறிப்பீடு நீண்டதாக இருக்க வேண்டும் என்றால் , அது பல செயல்முறைகளாக பிரிக்கக்கப்படும் செயல்முறைக்கு கூடுதல் அளவை உருவாக்குவது பொருத்தமானது. முழு தபாவ படிநிலையின் தெளிவான கண்ணோட்டத்திற்காக ஒரு செங்குத்து (குறுக்கு - பிரிவு) வரைபடத்தை உருவாக்க முடியும். கிடங்கு முதலில் பயன்படுத்தப்படும் மிக உயர்ந்த மட்டத்திலும், பிறகு ஒவ்வொரு கீழ் மட்டத்திலும் காட்டப்படுகிறது.[3]
மேலும் காண்க
தொகு- செயல்பாட்டு வரைபடம்
- வணிக செயல்முறை மாதிரி மற்றும் குறியீடு
- கட்டுப்பாட்டுப் பாய்வு வரைபடம்
- தரவுத் தீவு
- தரவுப் பாய்வு
- தரவும் தகவல் காட்சிப்படுத்தலும்
- இயக்கப்படும் சுழலிலாத வரைபடம்
- டிராகன் அட்டவணை
- செயல்பாட்டுப் பாய்வுக் கட்டப் படிமம்
- சார்புப் படிமம்
- குழாய்த்தொடர்
- கட்டமைக்கப்புறு பகுப்பாய்வும் வடிவமைப்பு நுட்பமும்
- கட்டமைப்பு வரைபடம்
- அமைப்பு சூழல் வரைபடம்
- மதிப்பு ஓடை வரைபடம்
- பணிப்பாய்வு
- வரைகலை முறைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ ஜான் அஸ்ஸோலினி (2000). கணினி பொறியியல் நடைமுறைகள் அறிமுகம். ஜூலை 2000.
- ↑ 2.0 2.1 Bruza, P. D.; van der Weide, Th. P. (1990-11-01). "Assessing the quality of hypertext views". ACM SIGIR Forum 24 (3): 6–25. doi:10.1145/101306.101307. பன்னாட்டுத் தர தொடர் எண்:0163-5840.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Yourdon, Edward (1975). "Structured programming and structured design as art forms". Proceedings of the May 19-22, 1975, national computer conference and exposition on - AFIPS '75. p. 277. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1145/1499949.1499997.
- ↑ Larman, Craig (2012). Applying UML and patterns : an introduction to object-oriented analysis and design and iterative development (3rd ed.). New Delhi: Pearson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8177589795. இணையக் கணினி நூலக மைய எண் 816555477.
- ↑ Řepa, Václav (1999). Analýza a návrh informačních systémů (Vyd. 1 ed.). Praha: Ekopress. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8086119137. இணையக் கணினி நூலக மைய எண் 43612982.
நூல்தொகை
தொகு- Scott W. Ambler. The Object Primer 3rd Edition Agile Model Driven Development with UML 2
- Schmidt, G., Methode und Techniken der Organisation. 13. Aufl., Gießen 2003
- Stahlknecht, P., Hasenkamp, U.: Einführung in die Wirtschaftsinformatik. 12. Aufl., Berlin 2012
- Gane, Chris; Sarson, Trish. Structured Systems Analysis: Tools and Techniques. New York: Improved Systems Technologies, 1977. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0930196004. P. 373
- Demarco, Tom. Structured Analysis and System Specification. New York: Yourdon Press, 1979. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0138543808. P. 352.
- Yourdon, Edward. Structured Design: Fundamentals of a Discipline of Computer Program and Systems Design. New York: Yourdon Press, 1979. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0138544713. P. 473.
- Page-Jones, Meilir. Practical Guide to Structured Systems Design. New York: Yourdon Press, 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120314825. P. 384.
- Yourdon, Edward. Modern Structured Analysis. New York: Yourdon Press, 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0135986240. P. 688.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் தரவுப் பாய்வு வரைபடம் பற்றிய ஊடகங்கள்