தர்சன் லால் ஜெயின்

தர்சன் லால் ஜெயின் (Darshan Lal Jain) (12 திசம்பர் 1927 – 8 பெப்ரவரி 2021) என்பவர் ஒரு இந்திய சமூக செயற்பாட்டாளரும். இந்தியாவின் குடிமக்களுக்கான மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருதினை 2019 ஆம் ஆண்டில் பெற்றவரும் ஆவார். [1] [2][3] இவர் பொருளாதாரத்தில் நலிந்த இளம் குழந்தைகளுக்கு கல்வியளித்தமைக்காக நன்கு அறியப்பட்டவர் ஆவார்.[4][5]

தர்சன் லால் ஜெயின்
பிறப்பு(1927-12-12)12 திசம்பர் 1927
ஜகாத்ரி, அரியானா
இறப்பு8 பெப்ரவரி 2021(2021-02-08) (அகவை 93)
தேசியம்இந்தியர்
பணிசமூக செயற்பாட்டாளர்
விருதுகள்பத்ம பூசண்

இவர் அரியானாவில் சரசுவதி வித்யா மந்திர், ஜகாத்ரி (1954), பெண்களுக்கான தயானந்த் ஆங்கிலோ-வேத கல்லூரி நிர்வாகக் குழு, யமுனா நகர், பாரத் விகாஸ“ பரிசத். விவேகானந்தா பாறை நினைவு கழகம். வனவாசி கல்யாண் ஆசிரமம். அரியானா, இந்து சிக்சா சமிதி, அரியானா, கீதா நிகேதன் உறைவிடப் பள்ளி, குருசேத்ரா மற்றும் நந்த்லால் கீதா வித்யா மந்திர், அம்பாலா (1997) உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்வி நிறுவனங்களை உருவாக்கிய நிறுவனரும் ஆவார். .[1]

தொடக்க கால வாழ்க்கை தொகு

தர்சன் லால் ஜெயின் 12 திசம்பர் 1927-இல் ஜகாத்ரியில் ஒரு ஆன்மீக நம்பிக்கையுள்ள, தொழிற்துறையில் சிறந்து விளங்கிய ஜெயின் குடும்பத்தில் பிறந்தார். இவர் பாபுஜி என அழைக்கப்பட்டார். இவர் வளர்ந்த பிறகு தனது நாட்டுப்பற்றின் காரணமாக இராசுட்ரிய சுயம் சேவக் அமைப்பில் சேர்ந்தார். தனது 15 ஆம் வயதில். அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்தார். இந்தியாவின் நெருக்கடி காலத்தில் அரசின் கொள்கைக்கு எதிரான கருத்துகளை எழுதியமைக்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். 2007 ஆம் ஆண்டில், தேசத்தின் மறந்துபோன வீராங்கனைகளை நினைவில் கொள்வதற்காக தர்சன் லால் விளையாட்டு வீரர்களுக்கான கௌரவக் குழுவை அமைத்தார். ஹேமச்சந்திர விக்ரமாதித்யாவின் முடிசூட்டு விழா, பானிபத்தின் இரண்டாவது போர்வீரன் உட்பட பல விழாக்களை இந்தக் குழு நடத்தியது. அவர் சமுதாயத்தின் கல்வியை நோக்கி பணியாற்றினார் மற்றும் 1954 ஆம் ஆண்டில் சரசுவதி வித்யா மந்திருக்கு அடிக்கல் நாட்டினார். அவர் 1997 ஆம் ஆண்டில் நந்த் லால் கீதா வித்யா மந்திரை நிறுவியதிலிருந்து அஹா, வட கிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதியைச் சே ர்ந்த அறிவார்ந்த மாணவர்களில் தேவைப்படுவோருக்கு பள்ளிக்கல்வி மற்றும் இலவச உண்டு உறைவிட வசதி வழங்கப்பட்டது. [6]

விருது தொகு

2019 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவரது சமூக சேவையைப் பாராட்டி பத்ம பூசண் விருதினை அளித்து இவரை கௌரவித்தது. [6][7][8]

References தொகு

  1. 1.0 1.1 Sharma, Shiv Kumar (11 August 2018). "Nonagenarian social crusader of Y’nagar". தி டிரிப்யூன். https://www.tribuneindia.com/news/weekly-pullouts/haryana-tribune/nonagenarian-social-crusader-of-y-nagar/635376.html. 
  2. "राज्यपाल का पद ठुकराया, 'भागीरथ' बन सरस्वती के लिए संघर्ष किया, अब मिलेगा पद्मश्री अवार्ड" (in Hindi). Amar Ujala. 28 January 2019. https://www.amarujala.com/chandigarh/padma-awards-2019-padma-shri-award-to-darshan-lal-jain-of-haryana-to-preserve-saraswati-river. 
  3. "पद्मभूषण दर्शन लाल जैन को शिक्षा मंत्री रामबिलास ने किया सम्मानित" (in Hindi). தைனிக் பாஸ்கர். 29 January 2019. https://www.bhaskar.com/harayana/yamunanagar/news/haryana-news-padma-bhushan-darshan-lal-jain-has-been-honored-by-education-minister-ram-bilas-020047-3765752.html. 
  4. "Padma Awards 2019: Social, environmental and animal welfare crusaders who have been awarded for their efforts". டைம்ஸ் நௌவ். 25 January 2019. https://www.timesnownews.com/mirror-now/in-focus/article/padma-bhushan-vibhushan-shri-awards-2019-republic-day-rashtrapati-bhavan-social-crusaders/354160. 
  5. "List of Padma Awardees 2019" (PDF). Padmaawards.gov.in. இந்திய அரசு.
  6. 6.0 6.1 "सरस्वती को धरा पर लाने के नायक दर्शन लाल जैन पद्म भूषण से अलंकृत". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 1 February 2020.
  7. "91-YO Padma Awardee Says One Can Serve Nation Without Joining Politics Like Dr APJ Abdul Kalam". indiatimes.com (in ஆங்கிலம்). 3 March 2019. பார்க்கப்பட்ட நாள் 1 February 2020.
  8. "President Ram Nath Kovind confers Padma awards". The Economic Times. 16 March 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/president-ram-nath-kovind-confers-padma-awards/articleshow/68439070.cms?from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சன்_லால்_ஜெயின்&oldid=3115604" இலிருந்து மீள்விக்கப்பட்டது