தர்சுடன் புழுப்பாம்பு

தர்சுடன் புழுப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜெர்கோப்பிலிடே
பேரினம்:
ஜெர்கோபிலசு
இனம்:
ஜெ. தர்சுடோனி
இருசொற் பெயரீடு
ஜெர்கோபிலசு தர்சுடோனி
(போட்ஜெர், 1890)
வேறு பெயர்கள் [2][3]
  • திப்லோப்சு தர்சுடோனி
    போட்ஜெர், 1890
  • திப்லோப்சு தர்சுடோனி [sic]
    — பெளலஞ்சர், 1893
  • திப்லோப்சு வாலி
    பிரோக்டெர், 1924
  • திப்லோப்சு தர்சுடோனி [sic]
    பெளரெட், 1936
    (ex errore)
  • ஜெர்கோபிலசு தர்சுடோனி
    — ஹெட்ஜசு மற்றும் பலர், 2014

ஜெர்கோபிலசு தர்சுடோனி (Gerrhopilus thurstoni) அல்லது தர்சுடன் புழுப்பாம்பு என்பது ஜெர்கோபிடே குடும்பத்தைச் சேர்ந்த விசமற்ற குருட்டுப் பாம்பு ஆகும். இந்தச் சிற்றினம் மேற்கு இந்தியாவினைத் தாயகமாகக் கொண்டது. அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் எதுவும் இச்சிற்றினத்தின் கீழ் இல்லை.

சொற்பிறப்பியல்

தொகு

இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் எட்கர் தர்சுடனின் நினைவாக தர்சுடோனி என்ற சிற்றினப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.[4]

புவியியல் வரம்பு

தொகு

மேற்கு இந்தியாவில், ஜெ. தர்சுடோனி தெற்கு கோவாவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்திலும் (4,000 அடி) கேரளாவிலும் காணப்படுகிறது. இதனுடைய வட்டார வகை "நீலகிரி மலையாகும்.[5]

வாழிடம்

தொகு

ஜெ. தர்சுடோனியின் விருப்பமான இயற்கை வாழிடம் காடு ஆகும்.

விளக்கம்

தொகு

ஜெ. தர்சுடோனியின் உடல் நீளம் (வால் உட்பட) 30 செ.மீ. வரை வளரலாம். இதன் உடல் வெளிர் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் முதுகுப்புறத்திலும் வயிற்றுப்புறம் வெளிர் நிறமாகவும் இருக்கும். மூக்கும் மலக்குடல் பகுதியும் வெண்மையாக உள்ளன.[6]

இனப்பெருக்கம்

தொகு

ஜெ. தர்சுடோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

மேற்கோள்கள்

தொகு
  1. Srinivasulu, B.; Srinivasulu, C.; Ganesan, S.R. (2013). "Gerrhopilus thurstoni". IUCN Red List of Threatened Species 2013: e.T172715A1373521. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172715A1373521.en. https://www.iucnredlist.org/species/172715/1373521. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. McDiarmid RW, Campbell JA, Touré TA (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  3. சிற்றினம் Gerrhopilus thurstoni at The Reptile Database www.reptile-database.org.
  4. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).
  5. Boettger O (1890).
  6. Smith MA (1943).

மேலும் வாசிக்க

தொகு
  • Boettger O (1890). "Neue Schlange aus Ostindien ". Berichte über die Senckenbergische Naturforschende Gesellschaft in Frankfurt am Main 1890: 297-298. (Typhlops thurstoni, new species). (in German and Latin).
  • Boulenger GA (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families Typhlopidæ ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor & Francis, printers). xiii + 448 pp. + Plates I-XXVIII. ("Typhlops thurstonii [sic]", p. 26).
  • Hedges SB, Marion AB, Lipp KM, Marin J, Vidal N (2014). "A taxonomic framework for typhlopid snakes from the Caribbean and other regions (Reptilia, Squamata)". Caribbean Herpetology (49): 1-61. (Gerrhopilus thurstoni, new combination).
  • Procter JB (1924). "Description of a new Typhlops from S. India and Notes on Brachyophidium and Platyplectrurus ". Annals and Magazine of Natural History, Ninth Series 13: 139-142. (Typhlops walli, new species).
  • Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Typhlops thurstoni, p. 49).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சுடன்_புழுப்பாம்பு&oldid=4030883" இலிருந்து மீள்விக்கப்பட்டது