தர்பார் (இராகம்)
தர்பார் இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஇந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2), சாதாரண காந்தாரம் (க2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1] [2]:
ஆரோகணம்: | ச ரி2 ம1 ப த2 நி2 ச் |
அவரோகணம்: | ச் நீ2 த2 ப ம1 ரி2 கா2 கா2 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் காந்தாரம் ஒழுங்குமாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.
குறிப்பு
தொகு- ↑ Music Handbook - Raga Index -D 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ South Indian Music, Book IV, Prof. Sambamurthy
வெளியிணைப்புக்கள்
தொகு- The royal Durbar, சாருலதா மணி, தி இந்து, செப்டம்பர் 27, 2013
- சலமேல தர்பார் வர்ணம், மேற்கத்திய இசை எழுத்து வடிவில்