தர்வாசா
தர்வாசா (Derweze அல்லது Darvaza, பொருள்: கதவு) துருக்மேனிஸ்தான் நாட்டின் காராக்கும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம் ஆகும். இது துருக்மேனிஸ்தான் தலைநகர் அசுகாபாதுக்கு வடக்கே 260 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தர்வாசா Derweze | |
---|---|
நாடு | துருக்மெனிஸ்தான் |
மாகாணம் | அகால் மாகாணம் |
மக்கள்தொகை (1989 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 1,683 |
இந்த கிராமத்தில் பெரும்பாலும் நாடோடி இனமான டெகே குல மக்கள் குடி பெயர்ந்துள்ளனர்.
எண்ணெய்க் கிணறு
தொகுஇங்கு இயற்கை எரிவாயு அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்த சோவியத் புவியியல் நிபுணர்கள், 1971 ஆம் ஆண்டு துளைக்க துவங்கினர்.[1] அப்போது நிலம் தகர்ந்து விழுந்ததில், 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சு வாயு பரவாமல் தடுக்க திட்டமிட்ட அறிவியலாளர்கள், அந்த துவாரத்தில் தீ வைக்க முடிவெடுத்தனர்.[2] சில நாட்களில் எரிவாயு தீர்ந்து தீ சுடர் அணையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இன்று வரை தீ சுவாலை எரிந்து கொண்டிருக்கிறது.[3]
உள்ளூர் வாசிகள் இதை நரகத்தின் கதவு என குறிப்பிடுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Daily Mail article with photos
- Photos from the Darvaza Gas Crater or "Gates of Hell" பரணிடப்பட்டது 2011-09-16 at the வந்தவழி இயந்திரம்
- Tourist information for Darvaza
- யூடியூபில் Flaming Crater, Darvaza Turkmenistan 1/6 - Phillips Connor
- Pictures and YouTube link
- Interactive forum about the Darwaza Well பரணிடப்பட்டது 2011-05-21 at the வந்தவழி இயந்திரம்