தலிகு
தலிகு என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவரது தந்தை பெயர் கதக்சி. இவரது தாயார் கெர்மானைச் சேர்ந்த ஒரு இளவரசி ஆவார். இவர் புரியின் பேரன் ஆவார்.
தலிகு | |
---|---|
சகதாயி கானரசின் கான் | |
ஆட்சிக்காலம் | 1308–1309 |
முன்னையவர் | கோன்சக் |
பின்னையவர் | கேபக் |
பிறப்பு | தெரியவில்லை |
இறப்பு | 1309 |
மதம் | சன்னி இசுலாம் |
கோன்சக்கின் இறப்பிற்குப் பிறகு, தலிகு அதிகாரத்தைக் கைப்பற்றினார். கான் ஆனார். ஒரு முசுலிமான இவர் தன்னுடைய குடிமக்களை இசுலாம் மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தார். எனினும் அவரது இந்த முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. இது மற்றும் இவர் துவாவின் வழித்தோன்றல் கிடையாது ஆகிய காரணங்களால் மக்களிடையே இவரது ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டது. இது கிளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. இவரது எதிரிகள் துவாவின் மகனான கேபக்கை கானாகத் தேர்ந்தெடுத்தனர். 1309ஆம் ஆண்டு தலிகுவை யுத்தத்தில் தோற்கடித்தனர். இவரது ஆதரவாளர்கள் கேபக்கின் படைகளுடன் இணைந்தனர். அதே ஆண்டு கய்டுவின் மகன்களையும் தோற்கடிப்பதில் இவர்கள் முக்கியக் காரணமாக விளங்கினர்.