தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பு

தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பு (National Federation of Dalit Women) என்பது பன்னாட்டு அளவில் தலித் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும். தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பு 1995-ல் ரூத் மனோரமாவால் நிறுவப்பட்டது.

வரலாறு தொகு

தலித் பெண்களுக்கான தேசியக் கூட்டமைப்பு ஒரு யோசனை 1993-ல் ரூத் மனோரமா பெங்களூரில் தலித் பெண்களுக்கு எதிரான நடைபெற்ற வன்முறை விசாரணையை ஏற்பாடு செய்ய நேரத்தில் உருவானது.[1][2] தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பு[2] 1995-ல் நிறுவப்பட்டது. பின்னர் பெய்ஜிங்கில் நடந்த உலக மகளிர் மாநாட்டில், மனோரமா தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.[3]

தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மற்றும் மாநில அளவிலான குழுக்களை உருவாக்குதல், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்காணித்தல், வளங்களை உருவாக்குதல் மற்றும் தலித் பெண்களின் கல்விக்கான உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல ஆரம்ப இலக்குகளைச் செயல்படுத்திய.[4] 2001-ல், மனோரமாவுடன் தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பினர் இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில் பங்கேற்றார். இதில், இவர்கள் "ஜாதிப் பாகுபாட்டை உலகளாவிய அதிர்வலைகளை உருவாக்கும் வகையில் மொழிபெயர்த்து விவாதித்தார்கள்." [4] 2006ஆம் ஆண்டில், தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பு, தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரத்துடன் தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த முதல் தேசிய மாநாட்டை புது தில்லி நகரில் நடத்தியது.[4]

பணிகள் தொகு

தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பு மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. தலித் பெண்களின் பிரச்சினைகளில் செயல்படுகிறது. தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தலித் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[5][4] தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூர் மற்றும் பிராந்திய தலித் பெண்கள் குழுக்களுடன் இணைந்து அங்குள்ள பிரச்சினைகள் தீர்ப்பதில் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.[4] தலித் பெண்களின் தேசியக் கூட்டமைப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்குச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. தலித் பெண்களுக்கான தலைமைத்துவ வாய்ப்புகளை வழங்கவும் உதவுகிறது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Bhattacharya, Swarnima (27 August 2016). "The Making and Unmaking of a Dalit Woman Leader". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  2. 2.0 2.1 "Women Empowerment: Dr Ruth Manorama, President, National Alliance of Women". Challenger Awards (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2017-09-21. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  3. Smith 2008.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Mehta 2017.
  5. Subramaniam, Mangala. The Power of Women's Organizing: Gender, Caste, and Class in India. https://books.google.com/books?id=X8HvbckzEVAC&q=%22national+federation+of+dalit+women%22&pg=PA59. 
  6. Manorama, Ruth. "Background Information on Dalit Women in India" (PDF). Right Livelihood Award. Archived from the original (PDF) on 24 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 12 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

ஆதாரங்கள் தொகு