தலிப் சிங் சந்த்

இந்திய-அமெரிக்க அரசியல்வாதி

தலிப் சிங் சந்த் (Dalip Singh Saund) (செப்டம்பர் 20, 1899 - ஏப்ரல் 22, 1973) ஓர் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி ஆவார். இவர் மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினராக கலிபோர்னியாவின் 29வது காங்கிரசு மாவட்டத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவையில் பணியாற்றினார். ஐக்கிய அமெரிக்கப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியர், இந்திய அமெரிக்கர் மற்றும் ஆசிய அமெரிக்கர் ஆவார். காங்கிரசில் இவர் பதவியேற்றதற்கு முன்பு , கலிபோர்னியாவின் இம்பீரியல் கவுண்டியில் உள்ளூர் அரசியலில் தீவிரமாக இருந்தார்.

Dalip Singh Saund
Saund, c. 1961
Member of the U.S. House of Representatives
from கலிபோர்னியா's 29th district
பதவியில்
January 3, 1957 – January 3, 1963
முன்னையவர்John J. Phillips
பின்னவர்George Brown Jr.
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1899-09-20)செப்டம்பர் 20, 1899
Chhajulwadi, அமிர்தசரஸ் மாவட்டம், Punjab Province, British India (present-day Punjab, இந்தியா)
இறப்புஏப்ரல் 22, 1973(1973-04-22) (அகவை 73)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, U.S.
குடியுரிமைBritish India (1899–1947)
India (1947–1949)
United States (1949–1973)
அரசியல் கட்சிDemocratic
துணைவர்Marian Kosa
உறவினர்Daleep Singh (Great-grandnephew)
கல்விபஞ்சாப் பல்கலைக்கழகம் (BS)
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (MA, PhD)

இளமை வாழ்க்கை

தொகு

தலிப் சிங் சந்த் பிரித்தானிய இந்தியாவின் சஜுல்வாடியில் செப்டம்பர் 20,1899 அன்று நாதா சிங் மற்றும் ஜியோனி கௌர் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு பத்து வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்துவிட்டார். சந்த் வேல்ஸ் கல்லூரியில் பயின்றார்.[1] பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இந்திய சுதந்திர இயக்கத்தை சந்த் ஆதரித்தார். 1919 ஆம் ஆண்டில், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

1920 ஆம் ஆண்டில், பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உணவு பாதுகாப்புப் பற்றி படிப்பதற்காக தனது சகோதரரின் உதவியுடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.[2] 1922இல் முதுகலைப் பட்டமும், 1924இல் முனைவர் பட்டமும் பெற்றார். ஜூலை 21,1928 அன்று மரியன் இசட் கோசா என்பவரை மணந்தார், தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.[3][2]

புத்தக வெளியீடு

தொகு

1925 ஆம் ஆண்டில் இம்பீரியல் பள்ளத்தாக்கில் சந்த் வேளாண்மயில் ஈடுபட்டார். கேத்ரின் மேயோவின் மதர் இந்தியா என்ற இந்தியாவைப் பற்றிய புத்தகத்திற்கு பதிலளிக்கும் இவர் மை மதர் இந்தியா என்ற புத்தகத்தை 1930 ஆம் ஆண்டில் எழுதினார். இவர் இந்திய அமெரிக்கச் சங்கத்தை ஏற்பாடு செய்து 1942 இல் அதன் முதல் தலைவராக பணியாற்றினார். இந்த அமைப்பு இந்தியர்களை இயல்பாக்குவதற்கு தகுதி பெற அனுமதிக்கும் சட்டத்திற்காக வற்புறுத்தியது. பின்னர்,. லூஸ்-செல்லர் சட்டம் 1946 இல் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சந்த் டிசம்பர் 16,1949 அன்று அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார்.[4]

 
அமெரிக்க பிரதிநிதிகள் சபை முன்பு சந்த்அவரது பதவிக்காலத்தில் சவுந்தின் உருவப்படம்

இறப்பு

தொகு

பக்கவாதத்தைதால் பாதிக்கப்பட்டிருந்த சந்த் ஏப்ரல் 22,1973 அன்று இறந்தார்.[5][6] [7]

மேற்கோள்கள்

தொகு

நூல் ஆதாரங்கள்

தொகு
  • Moore, John; Preimesberger, Jon; Tarr, David, eds. (2001). Congressional Quarterly's Guide to U.S. Elections. Congressional Quarterly. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1568026021.
  • Pradhan, Sachin (1996). India in the United States: Contributions of Indian & Indians in the United States of America. SP Press International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0961712910.
  • Saund, Dalip (1960). Congressman From India. E. P. Dutton.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலிப்_சிங்_சந்த்&oldid=4144468" இலிருந்து மீள்விக்கப்பட்டது