தலேக்குன்னில் பசீர்
தலேக்குனில் பசீர் (Thalekunnil Basheer) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். பசீர் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு கசகூட்டம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் நுழைந்தார். காங்கிரசு கட்சி ஏ.கே.ஆண்டனியை முதலமைச்சராக நியமித்த பிறகு, பசீர் தனது பதவியை துறந்து ஆண்டனியை சட்டசபைக்கு போட்டியிட அனுமதித்தார். [1] பசீர் 1977 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரையும் 1979 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராகவும், 1984 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரையும் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும் சிராயன்கீழு மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். [2] [1] பின்னர் இவர் திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரசு கட்சித் தலைவராகவும், கட்சி பொதுச் செயலாளராகவும், கேரள பிரதேச காங்கிரசு கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். [1] [3]
தலேக்குனில் பசீர் Thalekunnil Basheer | |
---|---|
பிறப்பு | தலேக்குன்னு, திருவிதாங்கூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 7 மார்ச்சு 1945
இறப்பு | 25 மார்ச்சு 2022 வெம்பாயம், கேரளம், இந்தியா | (அகவை 77)
பசீர் மலையாள நடிகர் பிரேம் நசீரின் மைத்துனர் என்று அறியப்படுகிறார். நசீரின் தங்கையான சுக்ராவை இவர் மணந்தார்.
பசீர் மார்ச் 25, 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 ஆம் தேதியன்று தனது 77 ஆவது வயதில் வெம்பாயத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார் [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Congress veteran Thalekunnil Basheer, 79, no more". https://www.thehindu.com/news/national/kerala/congress-veteran-thalaikunnil-basheer-is-dead/article65258460.ece.
- ↑ "Members - Kerala Legislature". Retrieved 2022-02-14.
- ↑ "Veteran Congress leader Thalekunnil Basheer dies at 77". Retrieved 2022-05-07.
புற இணைப்புகள்
தொகு- "Chirayinkil Partywise Comparison". 3 July 2007. Archived from the original on 3 ஜூலை 2007. Retrieved 23 அக்டோபர் 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: bot: original URL status unknown (link)